Subscribe:

Saturday, October 1, 2011

1800 விடுதலைப் புலி முன்னாள் உறுப்பினர்கள் விடுதலை


1800 விடுதலைப் புலி முன்னாள் உறுப்பினர்கள் சமூகத்துடன் இணைக்கும் வைபவம் நேற்று அலரி மாளிகையில் நடைபெற்றது. இந்த நிகழ்வுகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்றது.
வெளிநாட்டுத் தூதுவர்கள், ராஜதந்திரிகள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மதத் தலைவர்கள், மற்றும் புனர்வாழ்வு பெற்றவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் புனர்வாழ்வு பெற்ற இளைஞர்களை அவர்களின் பெற்றோர்களிடம் கையளித்து உரையாற்றிய ஜனாதிபதி:

நாம் அனைவரும் இந்த நாட்டு மக் கள். வரலாற்றில் நம் மத்தியில் சிறந்த நல்லிணக்கம் இருந்தது. அதை சீர்குலைக்கும் வகையில் சில பாதகமான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. எனினும் நாடு என்ற வகையில் நாம் ஒன்றாக வாழ்கிறோம். ஒன்றாகவே செயற்பட்டோம். எமது தலைவர்கள் அதற்கான வழிகாட்டலை வழங்கினர்.
வரலாற்றில் சில குறைபாடுகள் நிகழ்ந் துள்ளன. அதனை நாம் மறந்து தவறுகளை சரி செய்து கொண்டு சுதந்திரமாக வாழ் வோம். நாம் எமது உறவுகளுடன் வாழ்கிறோம். எனினும் உங்களுக்கு அந்த சந்தர்ப்பம் இல்லாமல் போனது. இது உங்கள் தவறினால் நிகழ்ந்ததல்ல. அந்த கடந்த கால சம்பவங்களைக் கிளறுவதில் பயனில்லை. அந்த இருளிலி ருந்து மீண்டு ஒளியில் புது வாழ்வு வாழ்வேம்.
உங்கள் அபிலாஷைகளை நாம் என்றோ அறிந்து கொண்டோம். அதனால்தான் உங்களை மீட்டு பாதுகாத்து புனர்வாழ்வு வழங்கினோம். 12,000 பேருக்கு நாம் புனர்வாழ்வளித்துள்ளோம். அதில் பெருந்தொகையினர் சமுகத்துடன் இணைக்கப்பட்டுள்ளதுடன் இன்னும் சிலரே மீதமுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்
புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்படும் முன்னாள்  புலி உறுப்பினர்கள்  சிலர் பிழையாக வழிநடத்தப் கூடும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எச்சரிக்கை விடுத்துள்ளார் என்றும் இவ்வாறான நபர்களின் சதி வலையில் சிக்கி விடக் கூடாது என ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுகின்றது.

0 comments:

Post a Comment