Subscribe:

Sunday, August 28, 2011

நோன்பு பெருநாள் தர்மம்! - மறக்கடிக்கப்பட்டதும், தவறுதலாக புரிந்துகொள்ளப்பட்டதும்!


ஸதகத்துல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் தர்மம் பல முஸ்லிம்களால் மறக்கடிக்கப்பட்டதும், தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டதுமான கடமையாகும். நாம் அதன் முழுவிபரங்களை தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.1. கடமை:'முஸ்லிமான ஆண்கள், பெண்கள், பெரியவர், சிறியவர், அடிமை, அடிமையல்லாதவர் ஆகிய அனைவர் மீதும் ரமளானில் நோன்புப் பெருநாள் தர்மமாக பேரீத்தம் பழம், கோதுமை ஆகியவற்றில் ஒரு 'ஸாஉ' கொடுப்பதை நபி (ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூற்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவூது, நஸயீ, திர்மிதி,

Sunday, August 21, 2011

இது சோம்பேரிகளின் மாதமல்ல வீரர்களின் மாதம்.


நோன்பு மாதம் வந்துவிட்டால் எம்மில் அநேகர்இரவைப் பகலாகவும் பகலை இரவாகவும்மாற்றிக் கொள்வதைக் காண்கின்றோம்.திகாலையில் சஹர் செய்துவிட்டு எந்தவிதஇபாதத்களிலும் ஈடுபடாமல் நோன்பு திறக்கும்நேரம் வரை தூங்குபவர்களும் இருக்கின்றனர்.பின்பு இரவு நேரங்களில் பாதைகளில் சுற்றித்திரிந்து வீண் கேலிக்கைகளில்ஈடுபடுகின்றனர்ண்மையில் நோன்பு மாதம்என்பது சோம்பேரிகளை உருவாக்குமொருமாதமல்லமாறாக அது சிறந்தபண்பாடுடையவர்களையும் ஆளுமைஉடையவர்களையும் வீரமிக்கவர்களையும்உருவாக்கும் மாதம்.

பத்ர் யுத்தம் பற்றி ஓர் கண்ணோட்டம்


இதுதான் சந்தர்ப்பம் என நினைத்த மக்காவாசிகள் முஸ்லிம்களைப் பூண்டோடு அழிப்பதற்காகப் படைதிரட்டி வருகின்றனர்.
பின்னர் அபூ சுப்யான் வேறு வழியாக மக்கா சென்றுவிட முஸ்லிம்கள்ஆயுதக்குழுவுடன் மோதும் நிலை ஏற்படுகின்றது! ஈற்றில் இந்தப் போரில்முஸ்லிம்கள் வெற்றி பெருவதுடன் அபூ சுப்யான் அபூலஹப் போன்ற போரில் பங்கெடுக்காத குறைஷித் தலைவர்கள் போக மீதி முக்கியஸ்தர்கள் அனைவரும் பத்ரில் கொல்லப்பட்டு குறைஷிக் கூட்டம் வலு இழக்கச் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியிலிருந்து நாம் பெறவேண்டிய படிப்பினைகளை நோக்குவோம்.

அல்லாஹ்வின் கழாவை ஏற்றுக்கொள்ளல்:
வானங்கள் பூமியைப் படைப்பதற்கு 50 ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே படைப்பினங்களின் கத்ரை (விதியை) அல்லாஹ் விதித்துவிட்டான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அம்ரிப்னுல் ஆஸ்(ரலி).
நூல் : முஸ்லிம்
பத்ர் யுத்தம் அல்லாஹ்வின் கத்ரின் வல்லமையை மிகத்தெளிவாக உணர்த்தும் ஒரு நிகழ்ச்சியாகும். நபித் தோழர்கள் வியாபாரக் கோஷ்டியை இலக்கு வைத்தனர். அல்லாஹ் அவர்கள் யுத்தக் குழுவுடன் மோத முடிவுசெய்துவிட்டான். எனவே இவர்கள் எத்தனை திட்டங்கள் போட்டாலும் அவர்களால் அல்லாஹ்வின் நாட்டத்தை மீறி வியாபாரக் குழுவைப் பிடிக்க முடியவில்லை

வேந்தர் நபிகள் வசிக்கும் வீட்டில் விளக்கே தேவையில்லை


வேந்தர் நபிகள் வசிக்கும் வீட்டில் விளக்கே தேவையில்லை ஏந்தல் நபிகள் இருக்கும் இடத்தில் இரவே வருவதில்லை   திங்கள் நபிகள் உலவும் தெருவில் தென்றல் நடப்பதில்லை சங்கை நபியின் அங்கம் முன்னே தங்கம் ஜொலிப்பதில்லை அண்ணல் நபிகள் அருகே இருந்தால் அத்தர் மனப்பதில்லை கன்னல் நபியின் கருத்தை சுவைத்தால் கரும்பும் இனிப்பதில்லை   பூமான் நபிகள் பொன் மொழி முன்னே புத்தகம் நயப்பதில்லை கோமான் நபிகள் கூட நடந்தால் குடையும் தேவையில்லை ஏகன் தூதர் குரலை கேட்டோர் ! ஏகன் தூதர் குரலை கேட்டோர் இசையை ரசிப்பதில்லை தாஹா நபியிடம் பழகிய குழந்தை தாயிடம் செல்வதில்லை   மன்னர் நபிகள் வசிக்கும் பேறை மாளிகை பெறவில்லை தண்டோடிருக்க ஏழ்மையை தவிர வசதியை விட வில்லை பெருமான் நபிகள் எழுதும் பேறை பேனா பெறவில்லை உண்மை நபிகள் படிக்கும் பாக்கியம் நூற்கள் பெறவில்லை   வள்ளல் நபிகள் வணங்கும் நேரம் வான் மழை பெய்வதில்லை அள்ளிக் கொடுத்த கரத்தைப் பார்த்து ஆகாயம் சிவப்பதில்லை பாச நபியின் வயிற்றை முழுதாய் உணவே பார்த்ததில்லை காசிம் நபியின் வீட்டில் இருக்க காசுக்கு தகுதியில்லை வேந்தர் நபிகள் வசிக்கும் வீட்டில் விளக்கே 
தேவையில்லை


ஆக்கம்:- காயல் இஸ்லாம்

ரமழான் பாவமன்னிப்புக்குரிய மாதம்



{ إلا من تاب وآمن وعمل صالحا فألئك يدخلون الجنة ولا يظلمون شيئا}
தவ்பாச் செய்து, ஈமான் கொண்டு, நல்லறங்கள் புரிந்தவர்களே சொர்க்கத்தில் நுழைவார்கள், இவர்கள் சிறிதும் அநீதி இழைக்கப்படமாட்டார்கள். (அல்குர்ஆன் : 19:60)
{ يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار }
முஃமின்களே! -பாவத்திலிருந்து விலகி- தூய மனதுடன் நீங்கள் அல்லாஹ்விடம் தவ்பாச் செய்யுங்கள்! அவ்வாறு செய்தால் உங்கள் இரட்சகன் உங்கள் பாவங்களை உங்களை விட்டும் போக்கி, உங்களை சொர்க்கங்களில் பிரவேசிக்கச் செய்யலாம். அதன் கீழே சதா நதிகள் ஓடிக் கொண்டிருக்கும். . . . (அல்குர்ஆன் : 66:8)
செய்யதுல் இஸ்திஃபார்
( سَيِّدُ الِاسْتِغْفَارِ أَنْ تَقُولَ اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَأَبُوءُ لَكَ بِذَنْبِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ قَالَ وَمَنْ قَالَهَا مِنَ النَّهَارِ مُوقِنًا بِهَا فَمَاتَ مِنْ يَوْمِهِ قَبْلَ أَنْ يُمْسِيَ فَهُوَ مِنْ أَهْلِ الْجَنَّةِ وَمَنْ قَالَهَا مِنَ اللَّيْلِ وَهُوَ مُوقِنٌ بِهَا فَمَاتَ قَبْلَ أَنْ يُصْبِحَ فَهُوَ مِنْ أَهْلِ الْجَنَّةِ )
செய்யதுல் இஸ்திஃபார் -பாவமன்னிப்புத் தேடும் வாசகங்களில் தலையாய வாசகம்- யாதெனில் :
அல்லாஹும்ம அன்த்த ரப்பீ, லாயிலாஹ இல்லா அன்த்த, கலக்த்தனீ வஅன அப்துக, வஅன அலா அஹ்திக வவஃதிக மஸ்த்ததஃத்து, அவூது பி(க்)க மின் ஷர்ரி மா ஸனஃத்து, அபூஉ ல(க்)க பிநிஃமத்தி(க்)க அலய்ய, வஅபூஉ ல(க்)க பிதன்பீ ஃபஃபிர்லீ, ஃபஇன்னஹு லா யஃபிருத் துனூப இல்லா அன்த்
இதனை உறுதியான நம்பிக்கையுடன் பகலில் கூறிய ஒருவர், மாலைப் பொழுதை அடைவதற்கு முன் அன்றைய தினமே மரணித்து விட்டால் அவர் சொர்க்கவாதிகளில் ஒருவராவார். இதனை உறுதியான நம்பிக்கையுடன் இரவில் கூறியவர் காலைப் பொழுதை அடைவதற்கு முன் மரணித்து விட்டால் அவர் சொர்க்கவாதிகளில் ஒருவராவார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : ஷதாத் இப்னு அவ்ஸ் -ரலி, நூல் : புகாரீ 5831)

நோன்பு


நோன்பு வாஜிபுகளில் ஒன்றும், இஸ்லாம் மனிதர்களை பயிற்றுவித்துமனிதப் புனிதர்களாக மாற்றுவதற்காக வேண்டி வருடாந்தம் வைத்திருக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்றுமாகும். மனிதன் சுப்ஹுடைய அதானிலிருந்து மஃரிப் வரைக்கும் இறைகட்டளைக்கு அடிபணிவதற்காக சில செயல்களிலிருந்து தவிர்ந்து கொள்ளுதல் நோன்பாகும்.
நோன்பின் வகைகள்.
1. வாஜிபானவை
2. ஹராமானவை
3. சுன்னத்தானவை
4. மக்ரூஹானவை

நோன்பை முறிக்கக் கூடியவை


நோன்பாளி கட்டாயமாக சுப்ஹுடைய அதானிலிருந்து மஃரிப் வரைக்கும் சில செயல்களை செய்வதை விட்டும் தவிர்ந்து கொள்ள வேண்டும். அவைகளில் ஒன்றையேனும் செய்வாரேயானால் அவரது நோன்பு பாத்திலாகி விடும். அவைகள்,
1. உண்ணுதல், பருகுதல்.
2. தொண்டையினுள் அதிகமான (கடினமான) புழுதியை சேர்த்தல்
3. நீருக்குள் தலையை நுழைத்தல்.
4. வாந்தியெடுத்தல்.
5. உடலுறவு கொள்ளுதல்.
6. இஸ்திம்னா - சுய இன்பத்தினால் இந்திரியத்தை வெளியாக்குதல்

நோன்பாளிக்கு வெறுக்கத்தக்க செயல்கள்


1. பலவீனமாவதற்கு காரணமான ஒரு செயலை செய்தல். உதாரணமாக, இரத்தம் கொடுத்தல்.
2. வாசனையுள்ள தானியங்களை நுகர்தல். (மணம் பூசுதல் மக்ரூஹ் அல்ல)
3. உடம்பில் இருக்கின்ற ஆடையை ஈரமாக்குதல்.

கழாவான நோன்பும் குற்றப் பரிகாரமும்


கழாவான நோன்பு.
எவராகிலும் நோன்பை அதன் உரிய நேரத்தில் நோற்காது விட்டால், கண்டிப்பா வேறொரு நாளில் அதனை நோற்க வேண்டும்.  எனவே, அதன் காலம் சௌ;றதன் பின் நோற்கப்படும் நோன்பை கழாவான நோன்பு எனக் கூறப்படும்.
குற்றப் பரிகாரம் (கப்பாரா)
நோன்பை பாத்திலாக்கியதற்காக குறிப்பிடப்பட்டிருக்கும் தண்டனையே குற்றப் பரிகாரமாகும். அவைகள்,
1. ஓர் அடிமையை உரிமையிடுதல்.
2. இரண்டு மாதங்கள் தொடராக நோன்பு நோற்றல். முப்பத்தியொருநோன்பு வரைi தொடர்ச்சியாகப் பிடிக்க வேண்டும்.
3. அறுபது ஏழைகளுக்கு உணவளித்தல். அல்லது அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு முத்து (750 கிராம்) உணவு கொடுத்தல்.
4. கப்பாரா வாஜிபான ஒருவர்கட்டாயமாக இம்மூன்றில் ஒன்றை செய்ய வேண்டும். இக்காலத்தில் அடிமையை தேடிப் பிடிக்க முடியாது என்ற காரணத்தினால் ஏனைய இரண்டில் ஒன்றைச் செய்ய வேண்டும். இவை ஒன்றையேனும் செய்ய முடியாது விட்டால், அவர் முடியுமானவரை ஏழைகளுக்கு உணவளிப்பார். அதற்கும் இயலாது போனால் பாவமன்னிப்புக் கேட்க வேண்டும்.

பிரயாணியின் நோன்பு


ஒருவர் பிரயாணம் செய்யும் போது நான்கு ரகஅத்துக்களுடைய தொழுகைகளை கட்டாயமாக இரண்டு ரகஅத்தாகவே நிறைவேற்ற வேண்டும். அத்துடன் அவர் அப்பிரயாணத்தின் பொது நோன்பு நோற்கக் கூடாது. ஆனால், அதன் கழாவை பிரயாணம் முடிந்ததன் பிறகு கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும். பிரயாணத்தின் போது தொழுகையை சுருக்காது பூரணமாக நிறைவேற்றும் ஒருவர், உதாரணமாக பிரயாணத்தையே தொழிலாகக் கொண்ட ஒருவர் - நோன்பு நோற்க வேண்டும்

ஸக்காதுல் பித்ர்


ரமழான் மாதம் முடிந்ததன் பிறகு, அதாவது நோன்புப் பெருநாளன்று கட்டாயமாக தனது பொருளிலிருந்து ஓரளவை ஸக்காதுல் பித்ர் என்ற அடிப்படையில் ஏழைக்கு கொடுக்க வேண்டும்.
ஸக்காதுல் பித்ரின் அளவு.
தனக்காகவும் தனது பொறுப்பிலிருப்பவர்கள் ஒவ்வொருவருக்காகவும் ஒரு சாஃ அதாவது சுமார் மூன்று கிலோ கொடுக்கப்பட வேண்டும்.
ஸக்காதுல் பித்ரின் பொருட்கள்.
பித்ராவுடைய பொருட்கள் கோதுமை, நெல், ஈத்தம் பழம், பிளம்ஸ், அரிசி, சோளம் மற்றும் இவைகளைப் போன்றவை. அத்துடன் இவை 

Friday, August 12, 2011

ரமழான் சிறப்புகள்


ரமழான் மாதத்தை பற்றி அல்லாஹ் திருமறையில் கூறுகிறான் :
ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். அல்குர்ஆன் 2:183

(இவ்வாறு விதிக்கப் பெற்ற நோன்பு) சில குறிப்பட்ட நாட்களில் (கடமையாகும்) ஆனால் (அந்நாட்களில்) எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால் (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும் எனினும்(கடுமையான நோய், முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பரிகாரமாக - ஃபித்யாவாக - ஒரு மிஸ்கீனுக்கு (ஏழைக்கு) உணவளிக்க வேண்டும் எனினும் எவரேனும் தாமாகவே அதிகமாகக் கொடுக்கிறாரோ அது அவருக்கு நல்லது - ஆயினும்