வட மத்திய மாகாணமான அநுராதபுரம் பழைய நகர் பகுதியில் பெளத்த மதகுருமாரார் தலைமை தாங்கிய பெளத்த மதக் குழுவொன்றினால் பழமையான ஸியாரம் ஒன்று உடைத்து தகர்ப்பட்டதுதொடரில் பெளத்த சாசன மற்றும் சமய விவகாரங்களுக்கான அமைச்சின் சிரேஷ்ட மேலதிகச் செலாளர்களுள் ஒருவரான எம்.எஸ்.கப்புகொட்டுவ உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அரச நிர்வாக அமைச்சுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றது.
ஸியாரத்தை அங்கிருந்து அகற்றுமாறு இவரே உத்தரவிட்டிருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த இடமாற்றத்துக்கான உத்தரவு பெளத்த சாசன மற்றும் சமய விவகாரங்களுக்கான அமைச்சின் செயலாளரால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த சியாரம் தகர்ப்பு சம்பவத்திற்கு பின்னர் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பிரதிநிதிகளுக்கும் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று பாதுகாப்புச் செயலாளரின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது. அதன்போது சியாரத்தின் தொன்மையை காட்டும் ஆதாரங்கள் சிலவும் அவருக்கு காண்பிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் இது தொடர்பாக பெளத்த சாசன மற்றும் சமய விவகாரங்களுக்கான அமைச்சில் இது தொடர்பான விசாரணை இடம்பெற்று வந்தது என்பது குறிபிடத்தக்கது.
விசாரணைகள தொடர்ந்து இடம்பெறுகின்றது இதேவேளை மேல்மாகாண ஆளுநர் அலவி மௌலான இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியுடன் தொடர்பு கொண்டதாகவும் ஜனாதிபதி இந்த விடயம் தொடர்பாக கவனம் எடுப்பதாக உறுதியளித்ததாக தெரிவித்திருந்தார் . அதேவேளை அவர் சிறுதொகை மதத் தீவிரவாதிகள் மத சமூகங்கள் மத்தியில் குழப்பத்தை விளைவிக்க முயற்சிப்பதாகவும் அவர்கள் மற்றுமொரு யுத்தத்தை ஏற்படுத்த முயல்வதாகவும் எச்சரித்திருந்தார்.
நாட்டின் நீதியமைச்சர் உட்பட முஸ்லிம் அமைச்சர்கள் இந்த விடயம் தொடர்பில் அரசியல் தலைமைக்கு அழுத்தங்களை கொடுத்து வந்ததாக அறிய முடிகின்றது. இது தொடர்பாக மேலும் கருத்துரைத்துள்ள மேல்மாகாண ஆளுநர் அலவி மௌலான இந்த விடயம் தொடர்பில் சர்வதேச சமூகத்திடம் சென்று எமது உரிமை மீறப்பட்டுள்ளது என்று முறையிட முடியும் ஆனால் நாம் நாட்டை இஸ்திரமற்ற நிலைக்குள் தள்ள விரும்பவில்லை ஆனால் நான் எச்சரிக்கின்றேன் எமது விடயத்தை கவனத்தில் கொள்ளாவிட்டால் நான் சர்வதேச சமூகத்திடம் சென்று முறையிடுவேன். முஸ்லிம்களின் உரிமைகளை பாதுகாக்க இறுதிச் சொட்டு இரத்தம் இருக்கும்வரை நான் போராட தயாராகவுள்ளேன் என்று தெரிவித்துள்ளமையும் குறிபிடதக்கது.




Sri Lanka Rupee Converter
0 comments:
Post a Comment