Subscribe:

Tuesday, November 22, 2011

காலி பலபிட்டி மகா வித்தியாலயத்தில் ஹிஜாப் அணியத் தடை


 காலி பலபிட்டி ரேவத்த சிங்கள மொழி மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து பாடசாலைக்கு வரக்கூடாது என்று பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர் . அந்த பாடசாலையில் 80 வரையான முஸ்லிம் மாணவ மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். இவர்களில் ஹிஜாப் அணிந்து பாடசாலைக்கு செல்லும் முஸ்லிம் மாணவியர் பாடசாலைக்கு ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்று பாடசாலை நிர்வாகத்தால் அறிவுறித்தப்பட்டடு அந்த மாணவியர் ஹிஜாப் இன்றி பாடசாலை செல்ல நிர்பந்திக்கப்பட்டுள்ளனர் என்று பெற்றோர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

Friday, November 18, 2011

2006ஆம் ஆண்டுக்குப்பின்னர் முதல்தடவையாக கட்டுமானப்பொருட்களை காஸாவிக்குள் கொண்டுசெல்ல இஸ்ரேல் அனுமதி.


ஐந்து வருடங்களின் பின்னர்,இஸ்ரேலிய எல்லையின் ஊடாக காஸாவிக்கு கட்டுமானப்பொருட்களை எடுத்துச் செல்வதற்கு இஸ்ரேல் அனுமதிவழங்கியுள்ளது.35சீமெந்து ட்ரக்குகளையும், உருக்குக் கம்பிகளையும் காஸாவிக்குள்கொண்டு செல்வதற்கு இஸ்ரேலிய அதிகாரிகள் அனுமதிவழங்கியுள்ளனர். இப்பொருட்கள் பலஸ்தீனின் அபூசலீம் கடவையின் ஊடாகவே கொண்டு செல்லப்படுகின்றன.2008ஆம் ஆண்டு காஸா இஸ்ரேலின் ஆக்கிமிப்புக்குஉட்பட்டிருந்தபோது அங்கிருந்த பத்து தொழிற்சலைகள் இஸ்ரேலால் அழிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.இதற்கு முன் சர்வதேச தன்னார்வக்குழு நிறுவனம் ஒன்றுக்கு மாத்திரமே காஸாவுக்குள் கட்டுமானப்பொருட்களை கொண்டு செல்வதற்கு அனுமதியளிக்கப்பட்டது.

காஸாவின் மீது பெரும்போர் ஒன்றை நடத்தப்போவதாக இஸ்ரேல் அச்சுறுத்தல்.


காஸாவின் மீது மற்றுமோர் பெரும்போர் ஒன்றை நடத்தப்போவதாக இஸ்ரேலின்தலைமை இராணுவஅதிகாரி ஜெனரல் இஸ்டேப் பேனி பலஸ்தீனர்களுக்குஅச்சுறுத்தல் விடுத்துள்ளார்.பலஸ்தீனின் மீது கூடியசீக்கிரத்தில் இராணுவ டவடிக்கைள் மேற்கொள்ளப்படும்எனவும் அதற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்படுவருவதாகவும், செவ்வாய்க்கிழமை இஸ்ரேலியபராளுமன்றத்தில் இஸ்ரேலின் வெளிநாட்டுஅலுவல்கள் மற்றும் பாதுகாப்புக்குழுவினர் மத்தியில் உரையாற்றும் போது அவர் தெரிவித்ததாக இஸ்ரேலின் உள்நாட்டு ஊடகமொன்று செய்திவெளியிட்டுள்ளது.

Tuesday, November 15, 2011

இஸ்லாத்தை ஏற்கும் பிரித்தானிய பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.




பிரித்தானியாவில் புனித இஸ்லாத்தை ஏற்கும் பெண்களின் எண்ணிக்கை கூடியளவில்அதிகரித்த வருவதாக ஆய்வொன்று தெரிவிக்கின்றது. பிரித்தானியாவில் இஸ்லாத்தைஏற்றுக்கொள்வதில் 2/3 பகுதியினர் பெண்களாவர்.கடந்த வருடம் 5200 பிரித்தானியர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர்.மேலும் அவர்களில் 

Monday, November 14, 2011

ரஷ்யா முஸ்லிம்கள் வீதிகளில் தமது ஹஜ்ஜூப்பெருநாள் தொழுகையை நிறைவேற்றியுள்ளார்கள்.


ரஷ்யாவின் மொஸ்கோ நகரில் வசிக்கும் முஸ்லிம்கள் தமது ஹஜ்ஜூப்பெருநாள் தொழுகையை வீதிகளில் நிறைவேற்றியுள்ளனர். ரஷ்யாவின் மொஸ்கோ நகரில்3மில்லியன் முதல் 5மில்லியன் வரையான மக்கள் வசிக்கின்றதாக கணக்கிடப்பட்டுள்ளது. எனினும் அங்கு குறைந்தளவான பள்ளிவாசல்களே காணப்படுகின்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று பல்லாயிரக்கணக்கான

Friday, November 4, 2011


அனபார்ந்த எனது இஸ்லாமிய உள்ளங்களுக்கு ஈதுல் அல்ஹா ஈகைத்திருநாள் வாழ்த்துக்கள்



நபி(ஸல்) அவர்களை கேலிச்சித்திரமாக வரைந்து அடுத்தபதிப்பில் வெளியிட திட்டமிட்டிருந்த சார்லிஹப்டோ எனும் சஞ்சிகையின் தலமையகம் மீது தாக்குதல்நடாத்தப்பட்டுள்ளது. சார்லிஹப்டோ சஞ்சிகையின் அடுத்தபதிப்பில் ஆசிரியர் தலையங்கமாக நபி(ஸல்) அவர்களின் கேலிச்சித்திரம்வெளியிடப்படவிருந்தது

Thursday, October 27, 2011

டியூனிசியா தேர்தல் முடிவுகளின்படி அந்நஹ்தா இஸ்லாமியக்கட்சி முன்னிலையில்.




டியூனிசியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தலின் தற்போதைய நிலவரங்களின்படி அந்நஹ்தா இஸ்லாமியக் கட்சியானது முன்னனியில் உள்ளதாகசெய்திகள்தெரிவிக்கின்றன. 217ஆசனங்களுக்காக நடைபெற்ற தேர்தலில்,87ஆசனங்களுக்கான முடிவுகளை செவ்வாய்க்கிழமையன்று டியூனிசியாவின் தேர்தல்ஆணையகம் அறிவித்தது.அதன்படி அந்நஹ்தா இஸ்லாமியக் கட்சி

லெபனான் மீது மூன்றாவது போரைத்தொடுக்க இஸ்ரேல் திட்டம் .



லெபனானின் மீது மூன்றாவது தடவையாகப் பேர்தொடுக்க ஸியோனிச அரசு திட்டமிட்டுள்ளதாக லெபனானின் உள்நாட்டு செய்தித்தாபனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்ரேலானது தனது இருப்பை உறுதிப்படுத்திக்கொள்ளும் நோக்கிலேயே லெபனான் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், 

சீனாவின் 400க்கு மேற்பட்ட பள்ளிவாசல்களில் வாசிகசாலைகள் திறக்கப்பட்டுள்ளன.



சீனாவின் வடமேற்குப்பகுதியின் 'இங்குசேடியா' பிரதேசத்தில் 400க்கும் அதிகமானபள்ளிவாசல்களில் வாசிகசாலைகள் திறக்கப்பட்டுள்ளதாக சீனாவின் செய்திநிறுவனமொன்று தெரிவிக்கின்றது.விஞ்ஞானம் சார்ந்த அறிவினை மேம்படுத்தும்நோக்கிலும், விஞ்ஞானம்,கலாச்சாரம் மற்றும் சட்டம் சாந்த துறைகளில் ஆய்வுகளை மேற்கொள்ள சந்தர்ப்பம் வழங்கும் நோக்கிலேயுமே பள்ளிவாசல்களில்

Saturday, October 1, 2011

சியாரம்: பெளத்த சாசன அமைச்சின் சிரேஷ்ட மேலதிகச் செலாளர் ஒருவர் இடமாற்றம்


வட மத்திய மாகாணமான அநுராதபுரம் பழைய நகர் பகுதியில் பெளத்த மதகுருமாரார் தலைமை தாங்கிய பெளத்த மதக் குழுவொன்றினால்  பழமையான ஸியாரம் ஒன்று உடைத்து தகர்ப்பட்டது
தொடரில் பெளத்த சாசன மற்றும் சமய விவகாரங்களுக்கான அமைச்சின் சிரேஷ்ட மேலதிகச் செலாளர்களுள் ஒருவரான எம்.எஸ்.கப்புகொட்டுவ உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அரச நிர்வாக அமைச்சுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றது.

1800 விடுதலைப் புலி முன்னாள் உறுப்பினர்கள் விடுதலை


1800 விடுதலைப் புலி முன்னாள் உறுப்பினர்கள் சமூகத்துடன் இணைக்கும் வைபவம் நேற்று அலரி மாளிகையில் நடைபெற்றது. இந்த நிகழ்வுகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்றது.
வெளிநாட்டுத் தூதுவர்கள், ராஜதந்திரிகள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மதத் தலைவர்கள், மற்றும் புனர்வாழ்வு பெற்றவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் புனர்வாழ்வு பெற்ற இளைஞர்களை அவர்களின் பெற்றோர்களிடம் கையளித்து உரையாற்றிய ஜனாதிபதி:

Wednesday, September 28, 2011

பலஸ்தீனர்களுடான ஆர்பாட்டத்துக்குப் பயிற்சியளிக்கும் இஸ்ரேலியப்பெண்.


பலஸ்தீனை சுதந்திர தேசமாக்குவதற்கு அங்கீகாரம்கோரி ஐக்கியநாடுகள்சபையில்நடைபெறவுள்ளவாக்கெடுப்பைத்தொடர்ந்து,யூதக்குடியிருப்பாளர்கள்ஆர்ப்பாட்டங்களில்ஈடுபடுவதற்காக,ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு பயிற்சியளித்துவருகின்றனர்.
யூதக் குடியிருப்பாளர்களில் பெண் ஒருவர் குஸ்எட்ஸியோன் பகுதியில் உள்ள மைதானமொன்றில் ஆயுதப்பயிற்சியில் ஈடுபட்டுகின்ற இப்படங்களை இஸ்ரேலின் உள்நாட்டுப் பத்திரிகையொன்று வெளியிட்டிருந்தது. 

Tuesday, September 27, 2011

பலஸ்தீன் இப்ராஹிமிய்யா பள்ளிவாசலில் தொழுவதற்கு இஸ்ரேலியஇராணுவம் தடைசெய்துள்ளது.



பலஸ்தீனமக்களுக்கும்,இஸ்ரேலிய இராணுவத்தின் பாதுகாப்பில் செயல்படும்யூ தக்குடியிருப்பாளர்களுக்கும் நேற்று புதன்கிழமையன்று அல்-கலீல் பகுதியில்மோதல் இடம்பெற்றுள்ளது.இதனால் அப்பிரதேசத்தில் உள்ள இப்ராஹிமிய்யாப்பள்ளிவாசலில் பலஸ்தீனமக்களுக்கு தொழுவதற்கு இஸ்ரேலியஇராணுவம் 

பிரான்ஸ் தலைநகரின் வீதிகளில் தொழுவதற்கு எதிரான சட்டம் அமுலாக்கம்.!





பிரான்ஸின் தலைநகர் பரிஸின் வீதிகளில் தொழுவதற்கு எதிரானசட்டம்
கடந்த வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்குவந்தது.பிரான்ஸ் அரசாங்கத்தினால் உடனநடியாக அமுலுக்குவரும்வகையில் கொண்டுவரப்பட்ட இச்சட்டத்தினால்பிரான்ஸ் முஸ்லிம்கள்

Monday, September 19, 2011

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு


நேற்று முன்தினம் இரவு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பிரதிநிதிகளுக்கும் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று பாதுகாப்புச் செயலாளரின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது இது தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா lankamuslim.org க்கு வழங்கிய தகவலை இங்கு தருகின்றோம் .

Sunday, September 18, 2011

இந்தியா, நேபாளத்தில் நில நடுக்கம்: 19 பேர் பலி _

இந்தியாவின் வட கிழக்கு மாநிலமான சிக்கிமை மையமாக வைத்து நேற்று மாலையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 6.8 ரிச்டர் அளவிலான இந்த நிலநடுக்கத்தால் சிக்கிம் மாநில மக்கள் பெரும் பீதியடைந்ததுடன் நிலநடுக்கத்தின் அதிர்வுகள் இந்தியாவின் பல பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் விமான விபத்து: 9 பேர் பலி, 70 பேர் காயம்


  அமெரிக்காவில் உள்ள நெவாடாவில் விமான கண்காட்சி நடந்தது. அப்போது 2ஆம் உலகப் போரில் பங்கேற்ற விமானங்களுக்கான பந்தயம் நடந்தது. அதில் ஒரு விமானம் நடுவானில் கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்தது. அதில் விமானத்தின் உடைந்த பாகங்களின் சிதறல்கள் விழுந்ததில் விமானி உள்பட பந்தயத்தை வேடிக்கை பார்த்த 9 பேர் பரிதாபமாக இறந்தனர்.

ரயில் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு


அளவ்வையில் நேற்று இடம்பெற்ற ரயில் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளது. சம்பவத்தில் 25 பேருக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவர்களில், 18 பேர் மேலதிக சிகிச்சைக்காக குருணாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதேவளை இந்த விபத்து குறித்து ஆராய விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டையிலிருந்து கண்டி நோக்கி பயணித்த ரயிலும் பொல்காவையில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற ரயிலும் அம்பேபுஸ்ஸ நோக்கி பயணித்த ரயிலுமே ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டது.

வேண்டாம் இனவாதம்


இன்று இலங்கையில் முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்திற்கும் எதிரான பிரசாரங்கள் திட்டமிட்ட வகையில் செய்யப்பட்டு வருகின்றது பல இணைதளங்கள் சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் இது தொடர்பான பிரச்சாரத்துக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றது  இது தொடர்பாக   தகவல்களையும் லங்காமுஸ்லிம்  பதிவு செய்திருந்தது.

Saturday, September 17, 2011

கணவரை மகிழ்விப்பது எப்படி?

(அல்குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் நிழலில் – ஒவ்வொரு பெண்மணியும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்)

பாகிஸ்தானில் பயங்கர வெள்ளம்: 10 லட்சம் வீடுகள் சேதம்

தெற்கு பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தில் பருவ மழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தொடர்ந்து பெய்து வரும் மழையால் 45 லட்சம் விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளது. 3 லட்சம் மக்கள் வீடுகளை இழந்து தவிக்கிறார்கள்.

சிர்தேவில் கடாபி ஆதரவாளர்களுடன் புரட்சிப்படையினர் மோதல்

லிபியாவில் 42 ஆண்டுகள் ஆட்சி செய்து வந்த கர்னல் கடாபியின் ஆட்சி அகற்றப்பட்டு விட்டது.
தற்போது கடாபியின் சொந்த இடமான சிர்தே நகரில் அவரது ஆதரவாளர்கள் புரட்சிப் படையை எதிர்த்து வருகிறார்கள். இந்த எதிர்ப்பை மீறி புரட்சிப் படையினர் முன்னேறி வருகிறார்கள்.

நாம் ஒரு தேசிய அரசியல் தலைவனை இழந்த நாள்


ஸ்ரீலங்காமுஸ்லிம் காங்கிஸின் ஸ்தாபகத்தலைவரும் முன்னாள் அமைச்சருமான எம்.எச்.எம்.அஷ்ரப் கொல்லப்பட்டு 11வது ஆண்டு நேற்றாகும் இந்த நாள் நாடுமுழுவதிலும் உணர்வுபூர்வமாக நினைவு கூறப்பட்டது.
கிழக்குமாகாணத்தின் பல இடங்களிலும் பல்வேறு நிகழ்சிகள ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. மட்டக்களப்பில் பிரதான நிகழ்ச்சி ஒன்று கல்குடாவிலும் ஏற்பாடாகியுள்ளது.

முதல் பத்து இடங்களில் 6 தமிழ் மொழிமுல மாணவர்கள் அதில் 3 முஸ்லிம் மாணவர்கள்


நடைபெற்று முடிந்துள்ள 2011 ஆம் ஆண்டுக்கான 5ம் ஆண்டு மாணவர்களின் புலமை பரிசில் பரீட்சையில் பரீட்சை பெறுபேறுகளின்படி அகில இலங்கை ரீதியாக முதல் 10 இடங்களுக்குரிய புள்ளிகளை 3 முஸ்லிம் மாணவர்கள் பெற்றுள்ளனர்.

பிரதி அமைச்சர் பஷீர் சேகுதாவூத் கண்டனம்


அநுராதபுரம் பழைய நகர்ப் பகுதியில் அமைத்திருக்கும் சியாரம் சாதாரண உடை மற்றும் காவியுடை தரித்த குழுவினரால் உடைத்துத் தரை மட்டமாக்கப்பட்டிருக்கும் சம்பவம் இனங்களின் ஐக்கியத்துக்கும் சிறுபான்மையினங்களின் இருப்புக்கும் பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தலாக அமைந்திருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளரும் பிரதி அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து தானும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும் மிகுந்த கவலையையும் விசனத்தையும் அடைந்துள்ள நிலையில்இதனை வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்துள்ளார்.
பிரதியமைச்சர் பஷீர் சேகுதாவூத் மேலும் அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இச்சம்பவம் குறித்து அநுராதபுர முஸ்லிம்கள் மாத்திரமன்றி நாடு முழுவதிலும் உள்ள முஸ்லிம்கள் அதிர்ச்சியும் கவலையும் கொண்டுள்ளனர்.என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் மேல்மாகாண முதலமைச்சர் அலவி மௌலானா ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதை அடித்து இந்த விடயம் ஜனாதிபதியின் கவனதுக்கு கொண்டுசெல்லப்படும் என்று அறிய முடிகின்றது.
மேல்மாகாண ஆளுநர்  அலவி மௌலானா இது ஜே.வி.பி யினரின் வேலை சென்று தெரிவித்திருந்தமை குறிபிடதக்கது.
அவரின் அறிக்கையின் விரிவான வடிவம்
அநுராதபுரம் பழைய நகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒட்டுப்பள்ளம் செய்கு சிக்கந்தர் ஒலியுல்லாஹ் அப்பா அவர்கள் அடக்கியுள்ளதாக கூறப்படும் தர்கா சுமார் 400க்கு மேற்பட்ட சாதாரண உடை மற்றும் காவியுடை தரித்த குழுவினரால் உடைத்துத் தரை மட்டமாக்கப்பட்டிருக்கும் சம்பவம் இனங்களின் ஐக்கியத்துக்கும் சிறுபான்மையினங்களின் இருப்புக்கும் பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தலாக அமைந்திருப்பதாக தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளரும் பிரதி அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் இச்சம்பவம் குறித்து தானும் ஸ்ரீல.மு.கா.வும் மிகுந்த கவலையையும் விசனத்தையும் அடைந்துள்ள நிலையில் இதனை வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்துள்ளார்.
பிரதியமைச்சர் பஷீர் சேகுதாவூத் மேலும் அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இச்சம்பவம் குறித்து அநுராதபுர முஸ்லிம்கள் மாத்திரமன்றி நாடு முழுவதிலும் உள்ள முஸ்லிம்கள் அதிர்ச்சியும் கவலையும் கொண்டுள்ளனர். இச்சம்பவத்தின் பின்னால் நிற்கும் சக்தி எது? யார் இவற்றுக்கு பொறுப்பு எனத் தெரியாது அச்சம் கொண்டுள்ளனர்.
இச்சம்பவம் நடைபெறும் வேளையில் சம்பவ இடத்துக்குச் சென்று தர்காவைப் பாதுகாக்க முயன்ற முஸ்லிம் மக்களை பொலிஸார் அங்கு செல்லவிடாமல் தடுத்துள்ளனர். அநுராதபுரம் புனித நகராக பிரகடனப்படுத்தப்பட்ட எல்லைக்குள் எந்தவித பாதிப்புக்கும் உள்ளாகாமல் இந்த தர்கா அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பும் இவ்வாறான சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. அநுராதபுரம் பழைய நகர (குருநாகல் சந்திப்)பகுதியில் பரம்பரையாக வசித்து வந்த முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டிருந்த நிலையில் அப்பகுதியில் இருந்த பள்ளிவாசலொன்றும் இவ்வாறே 2008 மே மாதம் 15 ஆம் திகதி புல்டோசர் இயந்திரத்தினால் தரைமட்டமாக்கப்பட்டது.
இப்போது நடைபெற்றிருப்பது போன்று இவ்வாறான சம்பவங்கள் இனிமேல் நடைபெற இடமளிக்கப்படக்கூடாது என அரசாங்கத்துக்கும் பாதுகாப்புக்குப் பொறுப்பான தரப்பினருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வலியுறுத்துகிறது.
நடைபெற்றிருக்கும் இச்சம்பவமானது இந்நாட்டின் மீது அரபு முஸ்லிம் நாடுகள் கொண்டிருக்கும் நல்லபிப்பிராயங்களுக்கும் சிறுபான்மை மக்கள் மீதான பெரும்பான்மையின மக்களின் நல்லபிப்பிராயங்களுக்கும் பெரும்பான்மையின மக்கள் மீதான சிறுபான்மையின மக்களின் நல்லபிப்பிராயங்களுக்கும் மதச் சகிப்புத் தன்மைக்கும் மோசமான பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கின்றது.
எனவே ஜனநாயக விழுமியங்களை மதித்து, அரசாங்கம் இவ்விடயத்தில் நேரடியாக முஸ்லிம்களுக்கு நியாயமானதும் நீதியானதுமான தீர்வை உடனடியாகப் பெற்றுக் கொடுக்க வேண்டியது அவசியமாகும்.

வடக்கு முஸ்லிம்களுக்கு தீர்க்கமான காலகட்டம்


வடமாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் 30 வருடங்களுக்கு பின் குடிசன மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. குடிசன மதிப்பீட்டுத் திணைக்களத்தால் 10 வருடங்களுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் கணக்கெடுப்புப் பணிகளே தற்போது வடமாகாணத்தில் இடம்பெற்று வருகிறது.

மிருகங்களை பலியிடுவதை தடுக்க சட்டத்திருத்தம் கோரும் பிக்கு முன்னணி


தேசிய பிக்கு முன்னணி மத வழிபாடுகளுக்காக மிருகங்களை பலியிடுவதை தடுக்கும் வகையில் சட்ட திருத்தத்தை கொண்டுவருமாறு அரசாங்கத்தை கோரியுள்ளது என்று சண்டே ஒப்சேர்வர் தெரிவிக்கின்றது.

உலகை அச்சுறுத்தும் உயிர்க் கொல்லி நோய் _





 உலகில் காணப்படும் ஆட்கொல்லி நோய்களில் நீரிழிவு நோயும் ஒன்றாகக் கருதப்படுகின்றது.


ஆரம்ப காலங்களில் இந்நோய் தொடர்பான விழிப்புணர்வு நம்மிடையே போதியளவு காணப்படாத போதிலும் தற்போது அந்நிலை மாற்றமடைந்து வருகின்றது. 

Thursday, September 15, 2011

ஐரோப்பா பெண்கள் பெற்றிருப்பது சுதந்திரமா?


http://www.freewebs.com/black-legacy/Slave-hung-on-ship-1.jpg
சமீபத்தில் இணையச் செய்தி ஒன்றைப் படிக்க நேர்ந்தது. அதில் இஸ்லாமும் மற்ற மதங்களைப் போலவே பெண்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கின்றது என்று மக்கள் கலை இலக்கியக் குழவைச் சேர்ந்த நண்பர்கள் விமர்சனம் எழுதி இருந்தார்கள்.

துருக்கி இஸ்ரேலியர்களை வெளியேற்றுகின்றது


 கடந்த ஆண்டு காஸாவுக்கு நிவாரண பொருட்களை எடுத்துச் சென்ற கப்பல் மீது இஸ்ரேல் நடத்திய பயங்கரவாத தாக்குதலில் 9 துருக்கியர்கள் கொல்லப்பட்டார்கள். இரு இலங்கை முஸ்லிம்கள் உட்பட பலர் படுகாயம் அடைந்தனர் இது தொடர்பாக துருக்கியின் அழுத்தினால் ஐ.நா குழு விசாரணை நடத்திவந்தது . அந்த விசாரணை அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது அவ்வறிக்கையில் இஸ்ரேல் இராணுவ பலத்தைத் தேவையற்ற வகையில் பயன்படுத்தியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நெஞ்சை உலுக்கும் மிருக வதைகள்


 இஸ்லாம் மிருகங்கள் மீது இறக்கம் காட்டுமாறு போதிக்கின்றது தாகித்த ஒரு நாய்க்கு தண்ணீர் புகட்டிய காரணத்தினால் ஒரு மோசமானவிபச்சாரி மன்னிக்கப்பட்டால் என்று இஸ்லாம் கூறி  மிருகங்கள் மீது அன்பும் ,கருணையும் கட்டுமாறு எமக்கு போதிக்கின்றது.
மனிதன் நாகரீக வளர்ச்சியில் உச்சத்தை தொட்டுவிட்டான் என்று கூறுகிறோம் ஆனால் நாம் வாழும் உலகில் எம்முடன் வாழும் மிருகங்கள் எந்த கருணையும் இன்றி வைதைக்கப்படுகின்றது. மிகவும் மோசமாக சித்திர வதைகளை அனுபவிக்கின்றன நாகரிகத்தின் தொட்டில் என்று தம்மை தாமே அழைத்து கொள்ளும் மேற்கு நாடுகளில் கூட்டு மிருக வதைகள் தினமும் இடம்பெறுகின்றது. Video

அமெரிக்காவில் 4 1/2 கோடி பேர் பட்டினியால் வாடுகிறார்கள்!



america-crore-people-hunger-15-09-11
அமெரிக்காவில் 4 1/2 கோடி பேர் பட்டினியால் வாடுவதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.   உலகின் வல்லரசு நாடுகளில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவிலும் மக்கள் வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்கின்றனர். அங்கு கடந்த 1983-ம் ஆண்டு முதல் இந்த நிலை இருந்து வருகிறது. அமெரிக்காவில் ஒரு நபரின் ஆண்டு வருமானம் ரூ. 10 லட்சத்துக்கு கீழ் இருப்பவர்கள் வறுமையில் வாடுபவர்களாக கருதப்படுகின்றனர்.

மணங்கள் ம‎ணக்க மனங்கள் மாறட்டும்

பெண்களுக்கு அவர்களுக்குரிய மஹ்ரை (கடமையெனக் கருதி) ம‎னமுவந்து அளித்துவிடுங்கள்! ஆயினும், அந்த மஹ்ரிலிருந்து ஒரு பாகத்தை அவர்கள் உங்களுக்கு மனமுவந்து விட்டுக் கொடுத்தால், அதனை நீங்கள் தயக்கமி‎ன்றி அனுபவிக்கலாம்.
  அல்குர் ஆ‎ன்:4- பிற மதங்களில் இ‏றைவைன [‏இறைவனி‎ன் பொருத்தத்தை] அடைதலை முத்தி நிலை எ‎ன்கிறார்கள். இதனை அடைய ஆசைகளை துறத்தல் ேவண்டும். இல்லற வாழ்க்கையை வாழ்ந்தோ வாழாமலோ அனைத்தையும் துறந்த பி‎ன்பே ஆண்டவனை அடைய முடியும் என்கிறார்கள்.

கணவனின் கடமை



Post image for கணவனின் கடமை

கணவன் திருமணத்திற்குப் பிறகு தம் மனைவியுடன் பழகுவதிலும் அவளை நடத்துவதிலும் இஸ்லாம் கற்பிக்கும் நெறி முறைகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும். மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகள், அவளுடன் அழகிய முறையில் பழகுவது, அவளைக் கண்ணியமாக நடத்துவது ஆகியவை குறித்து இஸ்லாம் போதிக்கும் நல்லுரைகளை நாம் ஆராய்ந்தால் அவை நம்மை வியப்பில் ஆழ்த்திவிடுகின்றன. இஸ்லாம், பெண்ணின் உரிமைகளைப் பற்றி மிக ஆழமாக உபதேசித்துள்ளது. அவளுக்கு உலகின் எந்த மார்க்கமும் அளித்திராத உயரிய அந்தஸ்தை வழங்கியுள்ளது.

Wednesday, September 14, 2011

அஸர்பைஜானில் ஆசிரியைகளுக்கு ஹிஜாப் அணியத்தடை.!!



முஸ்லிம் ஆசிரியைகளுக்கு நாடுபூராகவுள்ள பாடசாலைகளில் ஹிஜாப்அணிவதைஅஸர்பைஜான் குடியரசு தடைசெய்துள்ளது. அஸர்பைஜானில் முஸ்லிம் ஆசிரியைகளுக்கானஹிஜாப் தடைச்சட்டமானது,புதிய கல்வியாண்டில் நடைமுறைப்படுத்தப்படுமென, அந்நாட்டின்கல்வி ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். ஆடைகள் விடயத்தில்ஆசிரியைகளிடையே ஒற்றுமையைக் கொண்டுவரும்

900வருடங்கள் பழமையான அல்குர்ஆன் பாகிஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.



பாகிஸ்தானின் ஜேல்யும் நகரத்தில்,900வருடங்கள் பழமைவாயந்த புனிதஅல்குர்ஆன் பிரதியொன்று அந்நாட்டின்முக்கிய தொல்பொருளியலாளர் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இப்புனித அல்குர்ஆன் பிரதியானது 12ஆம்நூற்றாண்டிக்குரியது எனபாகிஸ்தானின் பிரபலதொல்பொருளியலாளர் குலாம் அக்பர்மாலிக் தெரிவித்துள்ளார். ஜெல்யும்நகரின் மலைப்பகுதியில் வாழும் வயதுமுதிர்ந்த ஒருவரிடம் இருந்துஇப்பழமைவாய்ந்தபுனித அல்குர்ஆன் பிரதிபெறப்பட்டதாக, குலாம் அக்பர்மாலிக் தெரிவித்தார்.

லிபியாவை கையளிக்கமாட்டேன்: கடாபி _


 
லிபியாவில் தலைமறைவாக வாழும் தலைவர் கேணல் மும்மர் கடாபி அந்நாட்டில் தற்போது இடம்பெற்று வரும் புரட்சிக்கு பின்னணியில் வெளிநாடுகளின் செல்வாக்கு இருப்பதாக திங்கட்கிழமை வெளியிடப்பட்ட செய்தியில் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மரண தண்டனை விதிக்கப்பட்ட 17 இந்தியர்கள் விடுதலை _


  பாகிஸ்தானியரொருவரைக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடையதாக மரண தண்டனை விதிக்கப்பட்ட 17 இந்தியர்கள், 4.36 கோடி ரூபா அபராதம் அளித்து துபாய் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஐக்கிய அரபு நாட்டில் உள்ள சார்ஜாவில், 2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பாகிஸ்தானைச் சேர்ந்த மிஸ்ரி நசீர்கான் என்பவரை 17 இந்தியர்கள் சேர்ந்து கொலை செய்தனர். 

மனிதனிலிருந்து மின்சாரம்: ஜப்பானின் புதிய முயற்சி




  உலகம் தற்போது எதிர்நோக்கி வரும் பிரதான சவால்களில் ஒன்று மின் சக்திப் பற்றாக்குறையாகும்.

வளர்ந்து வரும் நாடுகள் முதல் வளர்ச்சியடைந்த நாடுகள் வரை அனைத்தும் இதற்கு முகங்கொடுத்து வருகின்றன.குறிப்பாக ஜப்பான் தற்போது மிகப் பெரியளவில் மின்சக்தி பற்றாக்குறைக்கு முகங்கொடுத்து வருகின்றது. அண்மையில் அந்நாட்டைத் தாக்கிய சுனாமியால் அங்கு காணப்பட்ட பல

துருக்கி ,இலங்கை நாடுகள் துதுவராலயங்களை திறக்க தீர்மானித்துள்ளது


தற்போதைய துருக்கிய பிரதமர் ரஜப் தயூப் அர்துகான் தலைமயிலான அரசாங்கத்துக்கும் இலங்கையில் ஜனாதிபதி மஹிந்த தலைமயிலான அரசாங் கத்துக்கும் இடையாளன உறவு வலுவடைந்து வருவதை தொடர்ந்து இரு நாடுகளும் துதுவராலயங்களை அமைக்க தீர்மானித்துள்ளது என்று அறிய முடிகின்றது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில்


ஜெனீவாவில் நேற்று முன்தினம் தொடக்கம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கூட்டத்தொடரில் சர்ச்சைக்குரிய தருஸ்மன் அறிக்கையை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள முடியாது என்றும், இவ்வறிக்கை ஐக்கிய நாடுகளின் நடைமுறைத் தேவைக்கு ஏற்புடைய வகையில் உத்தியோகபூர்வ ஆவணம் அல்ல என்பதனால் அதனை அங்கு விவாதிக்க முடியாது என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Tuesday, September 13, 2011

பிரிட்டனில் சுழற்புயல்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு


பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள Katia சுழற்புயல் காரணமாக நாட்டின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
15 வருடங்களுக்கு பின்னர் பிரித்தானியாவில் ஏற்பட்ட மோசமான புயலாக இது கருதப்படுகின்றது. இப்புயல் வேல்ஸ் பகுதியில் மணிக்கு 82 மைல் வேகத்திலும், வட இங்கிலாந்தில் மணிக்கு 70 மைல் வேகத்திலும் வீசுகின்றது.

ஈரானில் போதைப் பொருள் கடத்திய 5 நபருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்

ஈரானில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக குற்றசாட்டப்பட்ட 5 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
ஈரான் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள சீம்னான் மாகாணத்தில், ஷகரோத் என்ற இடத்தில் சிறைச் சாலை ஒன்று உள்ளது. இங்கு கைதிகளாக இருந்த 5 பேருக்கு நேற்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

கென்யாவில் பெட்ரோல் குழாய் வெடித்து சிதறியது: 100 பேர் உடல் கருகி பலி

கென்யா தலைநகர் நைரோபியில் பெட்ரோல் குழாய் வெடித்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் நூற்றுக்கும் அதிகமானோர் உடல் கருகி உயிரிழந்தனர்.
நைரோபியின் மையப் பகுதியில் இருந்து விமான நிலையம் வரை பெட்ரோல் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இக்குழாய் லுங்கா லுங்கா என்ற தொழிற்சாலைப் பகுதி வழியாகச் செல்கிறது.

ஸாராஹ் மாலினி பெரேரா என்ற முஸ்லிம் எழுத்தாளரும் தடுப்பு காவலும்


M.ஷாமில் முஹம்மட்
பௌத்த மத கடவுள் மீது சிறு நீர் கழித்து, அதை உடைத்து தகர்த்தவர்கள் தேச தலைவர்கள் பௌத்த மத கோட்பாடுகளை ஒப்பிட்டு ஆய்வு செய்த எழுத்தாளர் தேசதுரோகி வாழ்க இலங்கை ஜனநாயகம்

Monday, September 12, 2011

தான்சானியாவில் படகு விபத்து: 345 பேர் பலி

தான்சானியா நாட்டில் நடைபெற்ற படகு விபத்தில் சுமார் 345 பேர் இறந்திருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
தான்சானியாவில் உள்ள ஜான்சிபார் என்னும் இடத்தில் இருந்து பெம்பா தீவிற்கு சென்ற படகில் சுமார் 600 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் திடீரென ஏற்பட்ட விபத்தில் சிக்கி அனைவரும் நீரில் தத்தளித்தனர். தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் 250 பேரை காப்பாற்றினர்.
விபத்து குறித்த காரணம் எதுவும் உடனடியாக தெரியவில்லை என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரஷ்ய ஜனாதிபதிக்கு சவால்: பிரிட்டன் பிரதமர் கமரூன் மாஸ்கோ பயணம்

பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் ரஷ்யா தலைநகர் மாஸ்கோவிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இந்த நிலையில் பிரிட்டனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே உள்ள சில பிரச்சனைகளுக்கு தீர்வு காண ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெட்வடேவை வலியுறுத்த வேண்டும் என்று பிரிட்டனின் 4 முன்னாள் அயல்துறை அமைச்சர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

எந்தவொரு மதத்தின் மீதும் தாக்குதல் நடத்த மாட்டோம்: ஒபாமா

இஸ்லாம் மீது மட்டுமல்ல, வேறு எந்த மதத்தின் மீதும் அமெரிக்கா ஒரு போதும் போர் தொடுக்காது என்று அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார்.
அமெரிக்கா மீது அல்கொய்தா தீவிரவாதிகள் தொடுத்த போரின் 10வது நினைவு நாள் செப்டம்பர் 11ம் தேதியன்று அமெரிக்கா முழுவதும் அனுசரிக்கப்பட்டது.

பெரும் எதிர்பார்ப்புடன் விண்டோஸ் 8 டெப்லட்: மைக்ரோசொப்ட்டுடன் இணையும் செம்சுங்? _


  தென்கொரிய நிறுவனமான செம்சுங் மற்றும் மைரோசொப்ட் நிறுவனங்கள் இணைந்து புதிய டெப்லட் கணனியொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்புதிய கணனியானது மைக்ரோசொப்டின் விண்டோஸ் 8 இனைக் கொண்டியங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தொழுகையின் சிறப்பும் அதை விட்டால் ஏற்படும் இறைவனின் தண்டனையும்


பாங்கின் அர்த்தம்

அல்லாஹு அக்பர் :
அல்லாஹ் மிகப்பெரியவன
அல்லாஹு அக்பர் :
அல்லாஹ் மிகப்பெரியவன்
அல்லாஹு அக்பர் :
அல்லாஹ் மிகப்பெரியவன்
அல்லாஹு அக்பர் :
அல்லாஹ் மிகப்பெரியவன்

கஞ்சத்தனமும் எச்சரிக்கையும்


அல்லாஹ் மனிதர்களில் சிலருக்கு செல்வத்தை தந்திருப்பது அல்லாஹ் அவர்களுக்கு செய்த அருட்கொடையாகும். ஆனால் நம்மில் பலர் இதைப் பற்றிய சிந்தனையே இல்லாமல்,தன்னுடைய உத்யோகத்தாலும், தனது திரமையினாலும் செல்வத்தை சம்பாதித்ததாக நினைக்கின்றனர். அதன் காரணமாக நல்வழிகளில் செலவு செய்யாமல் கஞ்சத்தனத்துடன் இருக்கின்றார்கள். இப்படிப்பட்ட குணமுடையவர்களை அல்லாஹ் தனது திருமறையில் கடுமையாக கண்டிப்பதுடன் மட்டுமல்லாமல், நாளை மறுமையில் கடும் தன்டனையும் உண்டு என எச்சரிக்கின்றான்.

குழந்தையின் பிரிவை தாங்க முடியாமல் பெற்றோர் இறப்பது அதிகரிப்பு

தங்களுடைய பிறந்த குழந்தை ஒரு வயதிற்கு முன்னதாக இறக்கும் போது அதனை தாங்க முடியாத பெற்றோர் முன்கூட்டியே மரணம் அடைவது அதிகரித்துள்ளது.

ஆப்கனில் தற்கொலைப்படை தாக்குதல்: 50 அமெரிக்க வீரர்கள் படுகாயம்

செப்டம்பர் 11 தீவிரவாதத் தாக்குதலை உலகெங்கும் உள்ள அமெரிக்கர்கள் நினைவு கூறும் இந்த நாளில் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய அதிரடித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

எகிப்துடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த இஸ்ரேல் விருப்பம்

இஸ்ரேல் தூதரகம் எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ளது. இந்த தூதரகத்தை கிளர்ச்சியாளர்கள் தாக்கினர்.
தங்கள் நாட்டு தூதரகம் தாக்கப்பட்டாலும் எகிப்துடன் அமைதி பேச்சு நடத்துவதில் இஸ்ரேல் உறுதியாக உள்ளது என அந்நாட்டு பிரதமர் நெடன்யகு தெரிவித்தார்.
எகிப்தில் கிளர்ச்சியாளர்களை ஒடுக்குவதற்கு கடுமையாக போராடுகிறார்கள். மூன்று பேர் உயிரிழந்து பதட்டம் அதிகரித்துள்ளது.
பாலஸ்தீனம் காசா எல்லைப் பகுதியில் ஏற்பட்ட வன்முறை தாக்குதலின் தொடர்ச்சியாக இஸ்ரேலுக்கு எதிராக இந்த தாக்குதல் நடைபெறுகிறது.

Sunday, September 11, 2011

இரட்டை கோபுர தாக்குதலின் 10வது நினைவு தினம் இன்று அனுசரிப்பு

அமெரிக்க இரட்டை கோபுரம் தகர்ப்பு செப்டம்பர் 11 நினைவுநாள் இன்று அமெரிக்காவில் பலத்த பாதுகாப்பு மத்தியில் கடைபிடிக்கப்படுகிறது.
ஏறக்குறைய 3 ஆயிரம் பேர் உயிர்களை காவு வாங்கிய அல்கொய்தா தாக்குதலின் 10வது ஆண்டு நினைவு நாள் என்றாலும் ஒசாமா கொல்லப்பட்ட பின்னர் அனுஷ்டிக்கும் நினைவுநாள் என்பதால் இந்த ஆண்டு அமெரிக்கர்கள் மத்தியில் இது முக்கியத்துவம் பெறுகிறது.
செப்டம்பர் 11 நினைவுநாளில் அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் மக்கள் ஆங்காங்கே தாக்குதலில் மறைந்த நபர்களின் நினைவாக மலரஞ்சலி மற்றும் இறை துதி பாடினர்.