Subscribe:

Monday, November 14, 2011

ரஷ்யா முஸ்லிம்கள் வீதிகளில் தமது ஹஜ்ஜூப்பெருநாள் தொழுகையை நிறைவேற்றியுள்ளார்கள்.


ரஷ்யாவின் மொஸ்கோ நகரில் வசிக்கும் முஸ்லிம்கள் தமது ஹஜ்ஜூப்பெருநாள் தொழுகையை வீதிகளில் நிறைவேற்றியுள்ளனர். ரஷ்யாவின் மொஸ்கோ நகரில்3மில்லியன் முதல் 5மில்லியன் வரையான மக்கள் வசிக்கின்றதாக கணக்கிடப்பட்டுள்ளது. எனினும் அங்கு குறைந்தளவான பள்ளிவாசல்களே காணப்படுகின்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள், கடுமையான குளிருக்கு மத்தியில் ரஷ்யாவின் வீதிகளில் புனித ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர். ரஷ்யாவில் நிரந்தரமாக வாழும் மற்றும் வேலைசெய்யும் 3முதல் 5மில்லியான வரையான முஸ்லிம்கள் வசிக்கின்றனர்என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்பநிலை மறை 8பாகை செல்ஸியஸ் என்ற கடும்குளிருக்கு மத்தியிலும் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் புனித ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜூப்பெருநாள் தொழுகையை தொழுதனர்.இஸ்லாம்,ரஷ்யாவின் இரண்டாவது பெரிய மதமாகக் காணப்படுகின்றதுடன் அங்கு ஏறத்தாள 40மில்லியன் முஸ்லிம்கள் வாழ்கின்றனர்.ஐரோப்பிய நாடுகளில் துருக்கியின் இஸ்தான்பூல் நகருக்கு அடுத்தாக,அதிகளவுமுஸ்லிம்கள் சனத்தொகையைக் கொண்ட நகராக ரஷ்யாவின் மொஸ்கோ நகரம் காணப்படுகின்றது.2050ஆம் ஆண்டில் முஸ்லிம்களை பெரும்பான்மையினராகக் கொண்ட நடாக ரஷ்யா மாறும் என அவதானிகள் தெரிவிக்கின்றனர். 

0 comments:

Post a Comment