Subscribe:

Tuesday, November 22, 2011

காலி பலபிட்டி மகா வித்தியாலயத்தில் ஹிஜாப் அணியத் தடை


 காலி பலபிட்டி ரேவத்த சிங்கள மொழி மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து பாடசாலைக்கு வரக்கூடாது என்று பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர் . அந்த பாடசாலையில் 80 வரையான முஸ்லிம் மாணவ மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். இவர்களில் ஹிஜாப் அணிந்து பாடசாலைக்கு செல்லும் முஸ்லிம் மாணவியர் பாடசாலைக்கு ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்று பாடசாலை நிர்வாகத்தால் அறிவுறித்தப்பட்டடு அந்த மாணவியர் ஹிஜாப் இன்றி பாடசாலை செல்ல நிர்பந்திக்கப்பட்டுள்ளனர் என்று பெற்றோர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இந்த ஹிஜாப் தடைக்கு பின்னணியில் பலபிட்ய ரேவத்த சிங்கள மொழி மகா வித்தியாலயத்தில் மதகுரு ஒருவர் பிரதான காரணமாகவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது . இலங்கையிலுள்ள அனைத்து அரச முஸ்லிம் பாடசாலைகளிலும் ஹிஜாப் உடை பாடசாலைகளின் சீருடையாகவுள்ள அதேவேளை இலங்கையில் உள்ள சகல பாடசாலைகளுக்கும் முஸ்லிம் மாணவியார் இஸ்லாமிய ஹிஜாப் உடையுடன் பாடசாலைகளுக்கு வர அனுமதிக்கவேண்டும் என்று தெரிவிக்கும் அரச சுற்று நிரூபம் மர்ஹூம் அஸ்ரப் புனர் நிர்மாண அமைச்சராக இருந்தபோது கல்வி அமைச்சினால் அனுப்பப்பட்டுமுள்ளது.
அதற்கு பின்னரும் பல தடைவைகள் ஹிஜாப் தொடர்பான மேலதிக அரச அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும் பல பாடசாலைகளில் முஸ்லிம் மாணவியர் ஹிஜாப் அணிவதில் பல சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1 comments:

Anonymous said...

Best Slot Machines - LuckyClub Casino
Lucky Club Casino 카지노사이트luckclub is a new online casino in the USA, the number one site offering you all your favorite slots. You will find it online to play the newest

Post a Comment