காஸாவின் மீது மற்றுமோர் பெரும்போர் ஒன்றை நடத்தப்போவதாக இஸ்ரேலின்தலைமை இராணுவஅதிகாரி ஜெனரல் இஸ்டேப் பேனி பலஸ்தீனர்களுக்குஅச்சுறுத்தல் விடுத்துள்ளார்.பலஸ்தீனின் மீது கூடியசீக்கிரத்தில் இராணுவ டவடிக்கைள் மேற்கொள்ளப்படும்எனவும் அதற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்படுவருவதாகவும், செவ்வாய்க்கிழமை இஸ்ரேலியபராளுமன்றத்தில் இஸ்ரேலின் வெளிநாட்டுஅலுவல்கள் மற்றும் பாதுகாப்புக்குழுவினர் மத்தியில் உரையாற்றும் போது அவர் தெரிவித்ததாக இஸ்ரேலின் உள்நாட்டு ஊடகமொன்று செய்திவெளியிட்டுள்ளது.
இம்மாத ஆரம்பத்தில் பலஸ்தீனின் காஸாப்பகுதியில் இராணுவநடவடிக்கைகளைமேற்கொள்ள இஸ்ரேலின் உயர் இராணுவ அதிகாரிகள் அனுமதிவழங்கியிருந்தனர்.இதனைத் தொடர்ந்து இஸ்ரேலிய இராணுவம் காஸாவின் மீது ரொக்கட் தாக்குதல்களை நடாத்தி வருகின்றது.2008ஆம் ஆண்டு கஸாவை அழிக்கும் நோக்கில் தொடர்ச்சியாக மூன்றுவாரங்கள் இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல்களை மேற்கொண்டது. இத்தாக்குதல்களினால் 1400க்கும் அதிகமான அப்பாவி பலஸ்தீனமக்கள் கொல்லப்பட்டனர். இவர்களின் அதிகமானோர் பெண்களும் சிறுவர்களும் ஆவர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.எனவே எமது பலஸ்தீனசொந்தங்களின் விடுதலைக்காக அல்லாஹ்விடம் எப்போதும் பிரார்திப்போம்!
0 comments:
Post a Comment