Subscribe:

Sunday, August 21, 2011

பிரயாணியின் நோன்பு


ஒருவர் பிரயாணம் செய்யும் போது நான்கு ரகஅத்துக்களுடைய தொழுகைகளை கட்டாயமாக இரண்டு ரகஅத்தாகவே நிறைவேற்ற வேண்டும். அத்துடன் அவர் அப்பிரயாணத்தின் பொது நோன்பு நோற்கக் கூடாது. ஆனால், அதன் கழாவை பிரயாணம் முடிந்ததன் பிறகு கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும். பிரயாணத்தின் போது தொழுகையை சுருக்காது பூரணமாக நிறைவேற்றும் ஒருவர், உதாரணமாக பிரயாணத்தையே தொழிலாகக் கொண்ட ஒருவர் - நோன்பு நோற்க வேண்டும்.
பிரயாணியின் நோன்பின் சட்டம்.
பிரயாணம் செல்லுதல்.
1. ளுஹருக்கு முன் சென்றால் - தரஹ்ஹுசுடைய எல்லையை அடையும் போது நோன்பு இயற்கையாகவே பாத்திலாகிவிடும். ஆனால், அதற்கு முன் அதை பாத்திலாக்கினால் இஹ்தியாதே வாஜிபின்படி கப்பாரா கொடுக்க வேண்டும்.
2. ளுஹருக்குப் பின்பு சென்றால், அவரது நோன்பு சஹீஹாகும். அது பாத்திலாக மாட்டாது.
பிரயாணத்திலிருந்து திரும்புதல்.
1. ளுஹருக்கு முதல் சொந்த ஊருக்கோ, அல்லது பத்து நாள் தங்க வேண்டுமென்ற நிய்யத்துடன் ஒரு இடத்திற்கோ வந்தடைந்து விட்டால்
       அ)  நோன்பை முறிக்கும் காரியத்தை செய்யவில்லையென்றால் அதைப் பூரணப்படுத்துவார். அந்நோன்பு சஹீஹாகும்.
       ஆ)  அதை பாத்திலாக்கியிருந்தால் அந்த நாளுடைய நோன்பு அவருக்குக் கடமையல்ல. ஆனால் அதைக் கழாச் செய்வது கடமையாகும்.
2. ளுஹருக்குப் பிறகு வந்தடைந்தால் அவரது நோன்பு பாத்திலாகும். கட்டாயமாக அதை கழாச் செய்ய வேண்டும்.
குறிப்பு:- ரமழான் மாதத்தில் பிரயாணம் செய்வதில் பிரச்சினையில்லை. ஆனால்
        நோன்பு நோற்பதிலிருந்து தப்பிப்பதற்காக இருந்தால் மக்ரூஹ் ஆகும்.

0 comments:

Post a Comment