Subscribe:

Sunday, August 21, 2011

நோன்பு


நோன்பு வாஜிபுகளில் ஒன்றும், இஸ்லாம் மனிதர்களை பயிற்றுவித்துமனிதப் புனிதர்களாக மாற்றுவதற்காக வேண்டி வருடாந்தம் வைத்திருக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்றுமாகும். மனிதன் சுப்ஹுடைய அதானிலிருந்து மஃரிப் வரைக்கும் இறைகட்டளைக்கு அடிபணிவதற்காக சில செயல்களிலிருந்து தவிர்ந்து கொள்ளுதல் நோன்பாகும்.
நோன்பின் வகைகள்.
1. வாஜிபானவை
2. ஹராமானவை
3. சுன்னத்தானவை
4. மக்ரூஹானவை
வாஜிபான நோன்புகள்.
1. ரமழான் மாத நோன்பு
2. கழாவான நோன்பு
3. பாவத்தின் பரிகாரத்திற்கான நோன்பு.
4. நேர்ச்சையின் மூலமாக வாஜிபாகும் நோன்பு.
5. பெற்றோரின் கழாவான நோன்பு (மூத்த ஆண் பிள்ளையின் மீது)
ஹராமான நோன்புகள்.
1. நோன்புப் பெருநாளன்று நோற்கும் நோன்பு
2. ஹஜ்ஜுப் பெருநாளன்று நோற்கும் நோன்பு.
3. பெற்றோரின் நோவினைக்குக் காரணமான பிள்ளையின் சுன்னத்தான நோன்பு
4. (இஹ்தியாதே வாஜிபின்படி) பெற்றோர் அதை நோற்பதிலிருந்து தடுத்தள்ள பிள்ளையின் சுன்னத்தான நோன்பு.
சுன்னத்தான நோன்புகள்.
நோன்பு நோற்பதற்கு ஹராமான, மக்ரூஹான நாட்களைத் தவிர ஏனைய வருட அனைத்து தினங்களிலும் நோன்பு நோற்பது சுன்னத்தாகும். சில தினங்களில் நோற்பது சிறந்ததென உபதேசிக்கப்பட்டுள்ளதால் அவற்றில் சிலதை இங்கு கூறுகின்றோம்.
1. ஒவ்வொரு வியாழன், வெள்ளி
2. நபி (ஸல்) அவர்களுக்கு நபித்துவம் கிடைக்கப் பெற்ற நாள் - ரஜப் மாதம் 27ஆம் நாள்.
3. கதீருடைய நாளில் துல்ஹஜ் மாதம் 18ஆம் நாள்.
4. நபி (ஸல்) அவர்கள் பிறந்த நாள் - ரபீஉல் அவ்வல் 17ஆம் நாள்.
5. அறபாவுடைய நாள் - துல்ஹஜ் மாதம் ஒன்பதாவது நாள் (நோன்பு நோற்பதால் அன்றைய துஆக்களில் கலந்து கொள்ள முடியாது என்ற சந்தர்ப்பத்தைத் தவிர)
6. ரஜப், ஷஃபான் மாதத்தின் அனைத்திலும்
7. ஒவ்வொரு மாத்திலும் 13,14,15ஆம் நாட்களில்.
மக்ரூஹான நோன்புகள்.
1. விருந்தாளி, உபசரிப்பாளரின் அனுமதியில்லாது நோற்கும் சுன்னத்தான நோன்பு.
2. விருந்தாளி, உபசரிப்பாளரின் தடையுடன் நோற்கும் சுன்னத்தான நோன்பு.
3. தந்தையின் அனுமதியில்லாது பிள்ளை பிடிக்கும் சுன்னத்தான நோன்பு.
4. ஆசூரா நாளின் நோன்பு.
5. அறபாவுடைய நோன்பு (அந்நாளின் துஆக்களில் கலந்து கொள்வதற்கு தடையாக இருந்தால்)
6. அறபாவுடைய நாளா? அல்லது ஹஜ்ஜுப் பெருநாளுடைய நாளா எனத் தெரியாது நோற்கும் நோன்பு.

0 comments:

Post a Comment