Subscribe:

Sunday, August 21, 2011

கழாவான நோன்பும் குற்றப் பரிகாரமும்


கழாவான நோன்பு.
எவராகிலும் நோன்பை அதன் உரிய நேரத்தில் நோற்காது விட்டால், கண்டிப்பா வேறொரு நாளில் அதனை நோற்க வேண்டும்.  எனவே, அதன் காலம் சௌ;றதன் பின் நோற்கப்படும் நோன்பை கழாவான நோன்பு எனக் கூறப்படும்.
குற்றப் பரிகாரம் (கப்பாரா)
நோன்பை பாத்திலாக்கியதற்காக குறிப்பிடப்பட்டிருக்கும் தண்டனையே குற்றப் பரிகாரமாகும். அவைகள்,
1. ஓர் அடிமையை உரிமையிடுதல்.
2. இரண்டு மாதங்கள் தொடராக நோன்பு நோற்றல். முப்பத்தியொருநோன்பு வரைi தொடர்ச்சியாகப் பிடிக்க வேண்டும்.
3. அறுபது ஏழைகளுக்கு உணவளித்தல். அல்லது அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு முத்து (750 கிராம்) உணவு கொடுத்தல்.
4. கப்பாரா வாஜிபான ஒருவர்கட்டாயமாக இம்மூன்றில் ஒன்றை செய்ய வேண்டும். இக்காலத்தில் அடிமையை தேடிப் பிடிக்க முடியாது என்ற காரணத்தினால் ஏனைய இரண்டில் ஒன்றைச் செய்ய வேண்டும். இவை ஒன்றையேனும் செய்ய முடியாது விட்டால், அவர் முடியுமானவரை ஏழைகளுக்கு உணவளிப்பார். அதற்கும் இயலாது போனால் பாவமன்னிப்புக் கேட்க வேண்டும்.
இங்கு நோன்பை கழாச் செய்வது கடமை. ஆனால் கப்பாரா இல்லை.
1. வேண்டுமென வாந்தியெடுத்தல்.
2. ரமழான் மாதத்தில் முழுக்குடைய குளிப்பு உள்ளதென மறந்து ஜனாபத்துடன் ஒரு நாள் அல்லது பல நாள் நோன்பு நோற்றல்.
3. ரமழான் மாதத்தில் சுப்ஹின் நேரமாகி விட்டதா? இல்லையாவென கவனிக்காது நோன்பை பாத்திலாக்கக் கூடிய வேலை ஒன்றைச் செய்தல். உதாரணமாக தண்ணீர் குடித்தல், பின் சுப்ஹிலேயே இச்செயல் நடந்துள்ளதென அறிந்தால்.
4. சுப்ஹு ஆகவில்லையென ஒருவர் வெசால்வதைக் கெட்டு, நோன்பாளி அதை முறிக்கும் செயலைச் செய்து பின் சுப்ஹு ஆகியிருந்தது என தெரிய வந்தால்.
5. வேண்டுமென ரமழான் மாத நோன்பை பிடிக்காது விட்டாலோ, அல்லது அதை பாத்திலாக்கினாலோ  கழாச் செய்வதுடன் கப்பாராவும் வாஜிபாகும்.
கழாவான நோன்பினதும், அதன் கப்பாராவினதும் சட்டம்.
1. கழாவான நோன்பை அவசரமாக கழாச் செய்ய வேண்டுமென்பது அவசியமில்லை. இஹ்தியாதே வாஜிபின்படி அடுத்த வருட ரமழான் மாதத்திற்கு முன் அதை கழாச் செய்து விட வேண்டும்.
2. பல வருடத்தின் ரமழான் மாத கழாவான நோன்பு இருந்தால் அவைகளில் எதை முதலில் பிடித்தாலும் பிரச்சினையில்லை. ஆனால் அடுத்த வருடத்தின் நோன்பை எதிர்கொள்வதற்கு நாட்கள் மிகவும் குறைவாக இருந்தால், உதாரணமாக, கடைசி வருடத்தின் பத்து நோன்பு கழாவாக இருக்கின்றது, அதேபோல் ரமழான் மாதத்தை அடைவதற்கும் பத்து நாட்கள் இருக்கின்றன. இந்நிலையில் கட்டாயமாக அதனுடைய கழாவையே பிடிக்க வேண்டும்.
3. எவரும் கப்பாராவை நிறைவேற்றுவதில் பொடுபோக்காக நடந்து விடக் கூடாது. ஆனாலும் அதை அவசரமாக செய்து விட வேண்டுமென்பது அவசியமி;லலை.
4. கப்பரா ஒருவருக்கு கடமையாகி பல வருடங்களாக அதை செய்யாது விட்டிருந்தாலும் அதை விட கூடுதலாக மாட்டாது.
5. பிரயாணம் போன்ற காரணங்களுக்காக நோன்பு நோற்காது விட்டு, பின் ரமழான் மாதத்திற்குப் பிறகு அக்காரணம் நீங்கியும், அடுத்த ரமழான் வரும் வரைக்கும் வேண்டுமென்று அதன் கழாவை நிறைவேற்றாது விட்டால், கழாவானதை செய்வதுடன் ஒவ்வொரு நோன்பிற்கும் ஒரு முத்து (750 கிராம்) உணவு ஏழைகளுக்குக் கொடுக்க வேண்டும்.
6. எவராகிலும் ஒருவர் தனது நோன்பை ஹராமான வேலைகளைச் செய்து பாத்திலாக்கினால், உதாரணமாக, சுய இன்பத்திற்காக இந்திரியத்தை வெளியாக்குவது போல் - இஹ்தியாதே வாஜிபின்படி கப்பாரா அனைத்தையும் சேர்த்து செய்வது அவசியமாகும். அதாவது ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும். இரண்டு மாதங்கள் தொடராக நோன்பிருக்க வேண்டும். அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். இவை மூன்றையும் செய்வதற்கு அவனால் முடியாது விட்டால், அதில் முடியுமான ஒன்றை கட்டாயமாக செய்ய வேண்டும்.
7. நோயினால் நோன்பு பிடிக்காது விட்டு, அந்நோய் அடுத்த வருடம் வரையும் இருக்குமேயானால் கழாவான நோன்பு அவரிலிருந்து விழுந்து விடும். அத்தோடு கட்டாயமாக ஒவ்வொரு நாளுக்கும் ஏழைக்கு ஒரு முத்து உணவளிக்க வேண்டும்.
இவ்விடத்தில் கழாச் செய்வது கடமையல்ல. கப்பாராவும் கடமையல்ல.
1. பருவ வயதை அடைவதற்கு முன் பிடிக்காத நோன்புகள்.
2. காபிராக இருந்த போது சென்ற நோன்புகள். (புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கு)
3. வயோதிபத்தின் காரணத்தால் ரமழான் மாதத்திலும் நோன்பு பிடிக்க முடியாது போய் அதற்குப் பின்னும் அதை கழாச் செய்ய முடியாது போனால். ஆனால் நோன்பு பிடித்தல் அவருக்கு கஷ;டமாக இருந்தால் அதன் ஒவ்வொரு நாளுக்கும் ஏழைக்கு ஒஐ முத்து உணவளிக்க வேண்டும்.
பெற்றோர்களின் நோன்பை கழாச் செய்தல்.
பெற்றோர்கள் மரணித்ததன் பிறகு அவர்களின் மூத்த ஆண்பிள்ளையின் மீது அவர்கள் விட்ட நோன்பை கழாச் செய்வது கடமையாகும்.

0 comments:

Post a Comment