Subscribe:

Sunday, August 21, 2011

நோன்பை முறிக்கக் கூடியவை


நோன்பாளி கட்டாயமாக சுப்ஹுடைய அதானிலிருந்து மஃரிப் வரைக்கும் சில செயல்களை செய்வதை விட்டும் தவிர்ந்து கொள்ள வேண்டும். அவைகளில் ஒன்றையேனும் செய்வாரேயானால் அவரது நோன்பு பாத்திலாகி விடும். அவைகள்,
1. உண்ணுதல், பருகுதல்.
2. தொண்டையினுள் அதிகமான (கடினமான) புழுதியை சேர்த்தல்
3. நீருக்குள் தலையை நுழைத்தல்.
4. வாந்தியெடுத்தல்.
5. உடலுறவு கொள்ளுதல்.
6. இஸ்திம்னா - சுய இன்பத்தினால் இந்திரியத்தை வெளியாக்குதல்.
7. முழுக்குடன் சுப்ஹுடைய அதான் வரைக்கும் இருத்தல்.
நோன்பை முறிப்பவைகளின் சட்டங்கள்.
  1)  நோன்பாளி வேண்டுமென்று ஏதாவது ஒன்றை உண்டாலோ அல்லது      குடித்தாலோ அவரது நோன்பு பாத்திலாகி விடும்.
 2)  ஒருவர் வேண்டுமென்று பல்லின் இடைவெளிகளுக்குள் இருப்பவைகளை உள்ளுக்குள் அனுப்பினால் அவரது நோன்பு பாத்திலாகிவிடும்.
 3)  உமிழ் நிஐர விழுங்குவதினால் நோன்பு பாத்திலாக மாட்டாது. அது அதிகமாக இருந்தாலும் சரியே.
  4)  நோன்புடையவர் மறதியாக ஏதாவது உண்டாலோ அல்லது குடித்தாலோ நோன்பு பாத்திலாக மாட்டாது.
  5)  பலவீனத்தின் காரணத்தினால் எவரும் நோன்பைத் திறக்க முடியாது. ஆனால், அவரது பலவீனத்தை பொதுவாக தாங்கிக் கொள்ள முடியவில்லையென்றால் திறப்பதில் பிரச்சினையில்லை.
.
0-   ஊசி போடுதல்.
     ஊசி உணவிற்காக இல்லாதிருந்தால் நோன்பை பாத்திலாக்க மாட்டாது. அது உறுப்பை உணர்வற்று இருக்க வைத்தாலும் சரியே.
2. தொண்டையில் கடினமான புழுதியை சேர்த்தல்.
 2)  பின்வரும் சந்தர்ப்பங்களில் நோன்பு பாத்திலாக மாட்டாது.
       1)  நோன்பாளி கடினமான புழுதியை தொண்டையினுள் சேர்த்தால் அவரது நோன்பு பாத்திலாகி விடும். கோதுமை போன்ற உண்ணக் கூடியவைகளின் புழுதியாக இருந்தாலும் சரியே. அல்லது மண் புழுதி போன்று உண்ணப்படாததாக இருந்தாலும் சரியே.
            அ)  புழுதி கடினமாக இருந்தால்
            ஆ)  தொண்டைக் குழியினுள் செல்லாதிருந்தால் (வாயினுள் மாத்திரம்
                  செல்லுதல்)
            இ)  எதிர்பாராத விதமாக தொண்டைக்குள் செல்லுதல்.
            ஈ) நோன்பா என்று தெரியாதிருத்தல்.
            உ)  கடினமான புழுதி தொணடையினுள் சேர்ந்துள்ளதா?
                  இல்லையாவென சந்தேகித்தல்.
3. நீருக்குள் தலையை நுழைத்தல்.
   2)  பின்வரும் இடங்களில் நோன்பு பாத்திலாக மாட்டாது.
       1)  நோன்பாளி வேண்டுமென்று தலையை பூராகவும் முத்லக்கான நீருக்குள் நுழைத்தால் அவரது நோன்பு பாத்திலாகிவிடும்இ
       அ)  மறதியாக தலையை நீருக்குள் கொண்டு செல்லல்.
       ஆ)  தலையின் ஒரு பகுதியை அதனுள் நுழைத்தல்.
       இ)  ஒரு தடவை அதன் அரைவாசியையும் ஒரு தடவை அதன் மற்ற
                  பகுதியையும் நீருக்குள் நுழைத்தல்.
        ஈ) எதிர்பாராத விதமாக நீரினுள் விழுதல்.
        உ)  வேறொருவர் பலாத்காரமான முறையில் அவரது தலையை
                  நீருக்குள் அமிழ்த்துதல்.
         ஊ)  தலை பூராகவும் நீருக்குள் போயுள்ளதா? இல்லையாவென
                  சந்தேகித்தல்.
4. வாந்தியெடுத்தல்.
       1)  எப்போதாவது நோன்பாளி வேண்டுமென்று வாந்தியெடுத்தால் அவரது நோன்பு பாத்திலாகி விடும். அது நோயின் காரணமாக இருந்தாலும் சரியே.
       2)  அவர் நோன்பென அறியாது, அல்லது திடீரென வாந்தியெடுத்தால் நோன்பு பாத்திலாக மாட்டாது.
5. சுய இன்பம் காண்பதற்காக இந்திரியத்தை வெளியாக்குதல்.
       1)  நோன்பாளி சுய இன்பத்திற்காக ஒரு செயலை செய்து அவரிலிருந்து இந்திரியம் வெளியானால் அவரது நோன்பு பாத்திலாகி விடும்.
       2)  உணர்வில்லாது வெளியானால் அது பாத்திலாகாது. உதாரணமாக தூக்கத்தில் ஸ்கலிதமாகுவது போல்.
6. முழுக்குடன் சுப்ஹுடைய அதான் வரை இருத்தல்.
குளிப்பு கடமையான ஒருவர் சுப்ஹுடைய அதான் வரைக்கும் குளிக்காதிருந்தால், அல்லது தயம்மமுடையவர் தயம்மம் செய்யாதிருந்தால் சில சந்தர்ப்பங்களில் நோன்பு பாத்திலாகிவிடும்.
       1)  சுப்ஹுடைய அதான் வரை குளிக்காமலோ, அல்லது தயம்மம் செய்யக் கூடியவர் அதைச் செய்யாமலோ இருந்தால். ரமழான் மாத நோன்பிலும், கழாவான நோன்பிலும் அவை பாத்திலாகும். ஏனைய நோன்புகளாக இருந்தால் சஹீஹாகும்.
       2)  குளிப்பையோ அல்லது தயம்மத்தையோ மறந்து அது மறுநாள் அல்லது பல நாட்களுக்குப் பிறகு ஞாபகம் ஏற்பட்டால்...
   அ) ரமழான் மாதத்தின் நோன்புகளாக இருந்தால், கட்டாயமாக
                   அந்த நோன்புகளைக் கழாச் செய்ய வேண்டும்.
    ஆ) ரமழான் மாதத்தின் கழாவான நோன்புகளாக இருந்தால்,
         இஹ்தியாதே வாஜிபின்படி அவற்றைக் கழாச் செய்ய வேண்டும்.
  இ)  ரமழான் மாதமும், அதன் கழாவான நோன்புகளும் அல்லாது
        இருந்தால், அவை சஹீஹாகும். உதாரணமாக, நேர்ச்சையுடைய
           அல்லது தெண்ட குற்றத்துடைய நோன்பு.
3)   நோன்பாளி தூக்கத்தில் ஸ்கலிதமானால் உடனடியாக குளிக்க வேண்டுமென்பது வாஜிபல்ல. அவரது நோன்பும் சஹீஹாகும்.
       4)  ரமழான் மாதத்தின் இரவில் குளிப்பு கடமையான ஒருவர், குளிப்பதற்காக சுப்ஹுடைய அதானுக்கு முன்பு கண்விழிக்கமாட்டாரென அறிந்தால் அவர் தூங்கக் கூடாது. அவ்வாறு தூங்கி கண்விழிக்கா விட்டால் அவரது நோன்பு பாத்திலாகிவிடும்.

0 comments:

Post a Comment