Subscribe:

Saturday, September 17, 2011

மிருகங்களை பலியிடுவதை தடுக்க சட்டத்திருத்தம் கோரும் பிக்கு முன்னணி


தேசிய பிக்கு முன்னணி மத வழிபாடுகளுக்காக மிருகங்களை பலியிடுவதை தடுக்கும் வகையில் சட்ட திருத்தத்தை கொண்டுவருமாறு அரசாங்கத்தை கோரியுள்ளது என்று சண்டே ஒப்சேர்வர் தெரிவிக்கின்றது.

மேலும் அந்த தேசிய பிக்கு முன்னணியின் ஆலோசகரான ஹெடிகள விமலசேர தேரர் மிருகங்களை பலியிடுவதை தடுக்கும் பிரேரணைகள் பாராளுமன்றத்தில் முன்வைக்கபட்டுள்ளது என்றும் அந்த பிரேரணைகள் இன்னும் பாஸ் ஆகவில்லை என்றும் தெரிவித்துள்ளார் என்று தெரிவிக்கின்றது.
அதேவேளை சிலாபம் முன்னேஸ்வரம் ஸ்ரீ பத்தரகாளி அம்மன் கோயிலில் நடைபெறவிருந்த மிருக பலி பூஜையை தடுத்தமை பாராட்டப்பட வேண்டியது என அஸ்கிரி பீடாதிபதி உடுகம ஸ்ரீ புத்தரக்கித தேரர் பாராட்டியதாக அமைச்சரின் ஊடகப் பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.
அமைச்சர் மேர்வின் சில்வா கம்பஹா மாவட்டத்தில் இறைச்சி விற்பனையைத் தடை செய்யப் போவதாக அறிவித்துள்ளார் என்றும் இதன்படி அடுத்த வாரம் முதல் இந்த மாவட்டத்தில் இறைச்சி விற்பனை செய்யக் கூடாது என அவர் உத்தரவிட்டுள்ளார் என்றும் பிறிதொரு செய்தி தெரிவிக்கின்றது .

0 comments:

Post a Comment