Subscribe:

Monday, September 19, 2011

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு


நேற்று முன்தினம் இரவு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பிரதிநிதிகளுக்கும் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று பாதுகாப்புச் செயலாளரின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது இது தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா lankamuslim.org க்கு வழங்கிய தகவலை இங்கு தருகின்றோம் .

நேற்று முன்தினம் இரவு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பிரதிநிதிகளுக்கும் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று பாதுகாப்புச் செயலாளரின் இல்லத்தில் இடம்பெற்றது இந்த சந்திப்பில் மூன்று விடையங்கள் தொடர்பாக பேசப்பட்டது.
ஒன்று ஹஜ் தினங்களில் உழ்கியா கொடுப்பது தொடர்பாகவும் , இரண்டாவது அனுராதபுரம் சியாரம் தகர்ப்பு தொடர்பாகவும் , மூன்றாவது தேசிய அடையாள அட்டை தொப்பி, ஹிஜாப் அணிந்து படிக்கும் படம் தொடர்பாகவும் பேசப்பட்டுள்ளது . இந்த சந்திப்புக்கான ஏற்பாட்டை பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா மேற்கொண்டிருந்தார்.
இச்சந்திப்பில் சிலாபம் இந்துக் கோவிலில் மிருகங்களைப் பலிகொடுப்பதற்கு ஏற்படுத்தப்பட்ட தடையைச் சுட்டிக்காட்டபட்டது , எதிர்காலத்தில் உழ்கியாவுக்கும் இவ்வாறான பிரச்சினை ஏற்படலாம் என்பது பற்றியும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு எடுத்துக் கூறப்பட்டது. இது தொடர்பில் பதிலளித்த பாதுகாப்பு செயலாளர் முஸ்லிம்களின் ஹஜ் பெருநாளை முன்னிட்டு குர்பான் நிகழ்வுக்கு தடை ஏற்படாதவாறு அனைத்துப் பொலிஸ் நிலையங்களுக்கும் சுற்றுநிருபம் அனுப்பிவைக்கப்படும் என்றும் குழப்பநிலை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே சிலாபத்தில் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.
அனுராதபுரம் சியாரம் தகர்ப்பு தொடர்பாக பாதுகாப்பு செயலாளருக்கு எடுத்துரைக்கப் பட்டபோது அநுராதபுரம் சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எதிர்காலத்துள் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதிமொழி வழங்கியுள்ளார்.
தேசிய அடையாள அட்டை தொப்பி, அணிந்து படிக்கும் படம் எடுப்பதற்கு விதிக்கப்பட்டிருக்கும் தடை தொடர்பில் முஸ்லிம்களுடைய உரிமையைப் பறிக்கும் வகையில் அமைந்திருப்பதாக அவரிடம் எடுத்துக் கூறியபோது. இந்த விடயம் தொடர்பில் ஆட்பதிவுத்திணைக் களத்தின் தலைவருடன் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.
இந்த சந்திப்பில் அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தி தலைமையிலான அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை பிரதிநிதிகள் மற்றும்   இலங்கை முஸ்லிம் கவுன்ஸில் தலைவர்  என்.எம்.அமீன் மற்றும்  அதன் உறுப்பினர்கள் ஆகியோர் பாதுகாப்பு அமைச்சுச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவை சந்தித்தனர் இதன்போது பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா , கொழும்பு மாநகர வேட்பாளரும் , முன்னாள் அமைச்சருமான மிலிந்த மொரகொட ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.

0 comments:

Post a Comment