Subscribe:

Tuesday, September 13, 2011

ஸாராஹ் மாலினி பெரேரா என்ற முஸ்லிம் எழுத்தாளரும் தடுப்பு காவலும்


M.ஷாமில் முஹம்மட்
பௌத்த மத கடவுள் மீது சிறு நீர் கழித்து, அதை உடைத்து தகர்த்தவர்கள் தேச தலைவர்கள் பௌத்த மத கோட்பாடுகளை ஒப்பிட்டு ஆய்வு செய்த எழுத்தாளர் தேசதுரோகி வாழ்க இலங்கை ஜனநாயகம்

சில திங்களுக்கு முன்னர் தம்புள்ள பிரதேசத்தில் ‘இளமல்பொத’ பகுதியில் அமைச்சரும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய தலைவருமான ஜானக பண்டார தென்னக்கோன் மற்றும் மாகாண சபை உறுப்பினர் பிரமித்த பண்டார தென்னக்கோன் ஆகிய இருவரும் புத்தர் சிலை ஒன்றை தாக்கி சேத படுத்தியதாக சண்டே லீடர் பத்திரிகை தெரிவிக்கின்றது இவர்கள் சிங்கள பௌத்தர்கள் என்பது குறிபிடதக்கது இது பற்றி மேலும் தெரிவிக்கையில் இரு பாராளுமன்ற ஆளும் தரப்பு வேட்பாளர்கள் மத்தியில் ஏற்பட போட்டியின் விளைவு தென்னக்கோன்களின் ஆதரவாளர்கள் புத்தர் சிலைக்கு அருகில் சிறுநீர் கழித்த பின்னர் அதனை தாக்கி உடைத்துள்ளனர் – புத்தர் சிலையின் தலையும் , ஒரு பக்க காலும் முற்றாக தகர்த்து வீசப்பட்டுள்ளது-என்றும் இந்த புத்தர் சிலை தாக்குதல் சம்பவத்தில் தென்னக்கோனும் நேரடியாக தாக்குதலில் பங்கு பற்றியதாகவும் எனிலும் போலீஸ் அமைச்சர் தென்னக்கோனின் சில ஆதரவாளர்களை ஒரு நாள் மட்டும் போலீஸ் நிலையத்தில் வைத்திருந்து மறுநாள் எந்த குற்ற சாட்டுகளும் இன்றி விடுதலை செய்ததாகவும் பௌத்த தேரர் ஒருவரை ஆதாரமாக கொண்டு செய்தி வெளியிட்டுள்ளது விரிவாக
இதனுடன் ஸாராஹ் மாலினி பெரேராவின் குற்றசாட்டுடன் ஒப்பிட்டு நோக்கினால் இங்கு இலங்கை அரசியலுக்கு பௌத்த மதம் ஒரு வாகனமாக பயன் படுத்த படுவது தெரிகின்றது தமக்கு தேவையான போது பௌத்த மதத்தை பாதுகாப்பதை போன்று பௌத்த சிங்கள மக்களை உணர்வூட்டி பௌத்த மேலாதிக்கத்தை தூண்டி விடுவதும் , அதே பௌத்தம் தமது அரசியல் தேவைகளுக்கு இடையூறாக காணும் போது அதை முன் நின்று அழிக்க துணிவதும் இதைதான் காட்கின்றது ஸாராஹ் உண்மையான குற்றவாளியாக இருப்பின் அவரின் குற்றம் பகிரங்க படுத்த பட வேண்டும் ஆனால் அவர் இதுவரை கைது செய்யப்பட்டு ௧௫ நாட்களை எட்டியும் இதுவரை அவர் மீதான குற்றம் எதுவும் குறிபிடபடவில்லை ஸாராஹ்வை தொடர்ந்து தடுப்பு காவலில் வைப்பதன் ஊடாக சிங்கள மக்கள் மத்தியில் இருக்கும் பௌத்த சிங்கள பேரினவாத சக்திகள் தமது வாக்கு வங்கிகளை பலப்படுத்தி கொள்ளும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை
யுத்தம் முடிவடைந்த நிலையில் சிங்கள இனவாத சக்திகள் தம்மை தக்க வைத்து கொள்ள புதிய வழிகளை ஆராய வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறது இலங்கையின் அதிகார பூர்வமான மதமாக பௌத்த அரசியல் யாப்பினால் உறுதிபடுத்த பட்டுள்ளது எனிலும் பௌத்த இனவாத சக்திகள் பௌத்த மதத்தை வளர்ப்பது , பாதுகாப்பது என்பதை விடவும் மாற்று மத , இன விரோத அரசியல் செய்வதில் தான் அரசியல் இலாபங்களை அடைய முனைவதாக தெரிகின்றது
ஸாராஹ் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட கால பகுதியில் இருந்து கடந்த பத்து வருடங்களாக ஆய்வு செய்தது தொகுத்த கிறிஸ்தவம் , ஹிந்துவம் , இஸ்லாம், பௌத்தம் ஆகிய மதங்கள் பற்றிய ஒப்பிட்டு ஆய்வையும் , தனது சொந்த இஸ்லாம் நோக்கிய பயணம் பற்றிய அனுபவங்களையும் இரண்டு நூல்களா பதிவு செய்தார் , இவற்றில் எந்த மதத்தையும் தரக்குறைவாக விமர்சிகின்ர ஆக்கங்கள் எதுவும் இடம் பெற்றிருப்பதாக தகவல்கள் எதுவும் வெளியாக வில்லை , இவரின் சட்டத்தரணி அலெக்ஸ் பெர்னாண்டோ BBC சிங்கள சேவைக்கு வழங்கியுள்ள செவ்வியில் ஸாராஹ்வின் தடுப்புகாவல் சட்டவிரோதமானது என்று குறிபிட்டுள்ளார் என்பதுடன் தனக்கு இவரின் கைதுக்கான காரணம் இன்னும் அறிவிக்கபடவில்லை என்றும் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள ஸாராஹ்வுக்கு கூட கைதுக்கான காரணம் அறிவிக்கபடவில்லை என்று கூறியுள்ளார் என்பதுடன் மத சகிப்புதன்மை இல்லாமையால் ஏற்பட்ட கைது என்றும் கூறியுள்ளார் ஆக ஸாராஹ்வின் கைது மத சகிப்புதன்மை இல்லாமையனதும் , இனவாத அரசியல் தேவையினதும் கைது மொத்தத்தில் ஸாராஹ்வின் சட்டத்தரணி கூறுவதை போன்று இவரின் தடுப்புகாவல் சட்டவிரோதமானது
இவரின் சகோதரி மரியம் இது பற்றி கூறுகையில் இவர் இஸ்லாத்தை தழுவி கொண்ட கால பகுதியில் இருந்து இஸ்லாத்தையும் மற்ற மதங்களையும் ஒப்பிட்டு நூல் ஒன்றை எழுதிகொண்டிருந்தார் என்றும் எழுதும் பணி கடந்த வருடம் நிறைவடைந்ததாகவும் -2009 – விடுமுறையில் இலங்கை சென்ற ஸாராஹ் மாலினி பெரேரா தனது சிங்கள மொழி புத்தகங்களான From Darkness to Light இருட்டில் இருந்து வெளிச்சத்துக்கு என்ற தலைப்பிலும் இரண்டாவது Questions and Answers கேள்விகளும் பதில்களும் என்ற தலைப்பிலும் எழுதி முடித்திருந்த ஆக்கங்களை இரு புத்தகங்களாக பதிப்பு செய்து அவற்றில் ஒரு பகுதியை கார்கோ முகவர் ஒன்றின் ஊடாக அனுப்பும் வேளையில் குறித்த கார்கோ முகவர் நிலையத்தின் உரிமையாளர் போலீசாரை அழைத்து இந்த புத்தகங்கள் புத்தரை நிந்திபதா கூறி போலீஸில் முறையிட்டுள்ளார் இவர் தீவிர இனவாத அமைப்பான சின்ஹல உரிமையவுடன் தொடர்பு கொண்டவராக இருக்கலாம் என்று மரியம் கூறியுள்ளார் இவர் இலங்கையில் தனது விடுமுறையை முடித்து கொண்டு பஹ்ரை நாட்டுக்கு செல்வதற்காக கடந்த மார்ச் மாதம் 20ஆம் திகதி விமான நிலையம் சென்ற போது விமான நிலையத்தியில் வைத்து கைது செய்யப்பட்டு மிரிஹான போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு போலீஸ் கட்டுபாட்டில் இயங்கும் ஒரு சிறை கூடத்தில் தடுத்து வைக்கபட்டுள்ளார் இவர் DO- detention orders தற்போது தடுப்பு காவல் கட்டளை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கபட்டுள்ளார் இந்த D.O கட்டளை சட்டம் என்பது ஒருவரை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தாமல் 30 நாட்கள் வரை போலிஸ் தடுப்பு காவல் விசாரணைக்காக தடுத்து வைக்க முடியும் 30 நாட்கள் முடியும் போது மீண்டும் பல தடவைகள் 30 நாட்கள் நீடிப்புகளை போலீஸ் பெற்றுக்கொள்ள முடியும் தடுப்பு காவல் கட்டளை பாதுகாப்பு அமைச்சினால் வளங்கபடுகின்றது என்பது குறிபிடதக்கது
ஸாராஹ் மாலினி பெரேரா பற்றி சண்டே லீடர் குறிபிடுகையில் சண்டே லீடர் பத்திரிகையின் விசேட செய்தி பிரிவு மிரிஹான போலீஸ் நிலையத்துக்கு விஜயம் செய்து இன்ஸ்பெக்டர் உதைய குமார , OIC பிரதீப் ரத்னாயகே ஆகியோருடன் சந்தித்து பேசியுள்ளது எனிலும் இருவரும் ஸாராஹ் மாலினி பெரேராவுக்கு எதிரான குற்றசாட்டின் பெயரை கூற மறுத்து விட்டனர் என்றும் இந்த விடையம் தொடர்பாக எந்த தகவலும் தர மறுத்து விட்டதாகவும் சண்டே லீடர் பத்திரிகை குறிபிட்டுள்ளது
ஸாராஹ் மாலினி பெரேராவின் சட்டத்தரணி உயர் நீதி மன்றத்தில் உடனடியாக ஸாராஹ்வை விடுதலை செய்ய கோரும் வழக்கு ஒன்றை பதிவு செய்தும் தடுப்பு காவலில் வைக்க பட்டிருக்கும் ஸாராஹ்வை கோட்டுக்கு கொண்டு வர முடியவில்லை இன்றுடன் இவர் கைது செய்யப்பட்டு 14 தினங்கள் கழிந்துள்ளன எனிலும் இது வரை போலீஸ் இவர் மீது எந்த குற்றசாட்டையும் முன்வைக்க வில்லை இவர் இரண்டு தினங்களுக்கு முன்னர் முதல் தடவையாக தனது தாயுடன் தொலை பேசியில் பேசுவதற்கு 5 நிமிடங்கள் மட்டும் அனுமதிக்க பட்டுள்ளார் என்பது குறிபிட தக்கது
தற்போது ஸாராஹ்வின் சட்டத்தரணி தெரிவித்தாக தெரிவிக்க படும் செய்தி ஒன்றில் போலீஸ் ஸாராஹ்வை இஸ்லாமிய ஆயுத குழுக்களுடன் தொடர்பு இருக்கின்றதா என்பது பற்றி விசாரிப்பதாகவும் ஆனால் ஸாராஹ்வுக்கு அப்படி எந்த தொடர்பும் இல்லை என்று மறுத்துள்ளார்.

0 comments:

Post a Comment