Subscribe:

Wednesday, September 14, 2011

துருக்கி ,இலங்கை நாடுகள் துதுவராலயங்களை திறக்க தீர்மானித்துள்ளது


தற்போதைய துருக்கிய பிரதமர் ரஜப் தயூப் அர்துகான் தலைமயிலான அரசாங்கத்துக்கும் இலங்கையில் ஜனாதிபதி மஹிந்த தலைமயிலான அரசாங் கத்துக்கும் இடையாளன உறவு வலுவடைந்து வருவதை தொடர்ந்து இரு நாடுகளும் துதுவராலயங்களை அமைக்க தீர்மானித்துள்ளது என்று அறிய முடிகின்றது.

இலங்கை சுனாமியால் தாக்கப்பட்டதன் பின்னர் கடந்த 2005 ஆண்டு பெப்ரவரி மாதம் துருக்கிய பிரதமர் ரஜப் தயூப் அர்துகான் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டார். இதன் போது இலங்கையில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ”துருக்கி கிராமம்” என்ற பெயரில் வீட்டு தொகுதிகளை கொண்ட கிராமம் ஒன்றை நிர்மாணிக்க ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இதன் பின்னர் துருக்கியின் உதவி பிரதமர் ஹெமெட் அலி ஷாஹின் கடந்த 2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கை வந்தார்.
இதன் பின்னர் இலங்கை ஜனாதிபதி மஹிந்த கடந்த 2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு துருக்கி சென்றார் துருக்கி நாட்டிற்கு உத்தியோக விஜயம் மேற்கொண்ட முதல் ஜனாதிபதி என்ற பெருமையை மஹிந்த பெறுகின்றார். இலங்கை 1948 இல் சுதந்திரம் அடைந்த பின்னர் முதல் தடவையாக துருக்கிக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மஹிந்த வாகும்.
துருகியுடன் இலங்கை சிறந்த உறவை பேணிவருகின்றது. என்பது குறிபிடதக்கது . துருக்கிகான இலங்கை தூதுவராக பாரதி மனே விஜயரட்ன் என்பவர் நியமிக்கப் படவுள்ளார் என்று அறிய முடிகின்றது .

0 comments:

Post a Comment