Subscribe:

Wednesday, September 14, 2011

லிபியாவை கையளிக்கமாட்டேன்: கடாபி _


 
லிபியாவில் தலைமறைவாக வாழும் தலைவர் கேணல் மும்மர் கடாபி அந்நாட்டில் தற்போது இடம்பெற்று வரும் புரட்சிக்கு பின்னணியில் வெளிநாடுகளின் செல்வாக்கு இருப்பதாக திங்கட்கிழமை வெளியிடப்பட்ட செய்தியில் குற்றஞ்சாட்டியுள்ளார்.


கடாபிக்கு ஆதரவான படையினரால் பிரதான எண்ணெய் தொழிற்றுறை மீது இரட்டைத் தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கு சில மணித்தியாலங்களின் முன் சிரிய "அல்ராய்' தொலைக்காட்சியில் தன்னால் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே கடாபி இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளார்.

எதிர்க்கட்சி படையினரை தேசத் துரோகிகள் என விமர்சித்த கடாபி, அவர்கள் லிபியாவின் எண்ணெய் வளங்களை அபகரிக்க முயற்சிக்கும் வெளிநாட்டு அக்கறைகளுக்கு ஏற்ப செயற்படுவதாக கூறினார்.

""தேசத் துரோகிகள் விரும்புவது போன்று நாங்கள் லிபியாவை காலனித்துவ ஆட்சியாளர்களிடம் மீளவும் கையளிக்க மாட்டோம்'' என தெரிவித்த அவர், புரட்சியாளர்களுக்கு எதிராக போராடப் போவதாக சூளுரைத்தார். 



திரிபோலி நகர் உள்ளடங்கலான முக்கிய நகர்களின் கட்டுப்பாட்டை கடாபிக்கு விசுவாசமான படையினர் இழந்துள்ள நிலையிலேயே கடாபியால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கடாபி எங்குள்ளார் என்பது அறியப்படாத நிலையில், அவர் லிபியாவிலேயே இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் உரிமை கோரி வருகின்றனர்.

எனினும் அவரது மகன் சாடி உட்பட அவரது குடும்ப அங்கத்தவர்கள் பலர் அயல் நாடான நைகரை தஞ்சமடைந்துள்ளனர்.

அதேசமயம் கடாபிக்கு எதிரான படையினர் நேட்டோ படையினரின் வான் தாக்குதலின் துணையுடன் கடாபிக்கு விசுவாசமான படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களை கைப்பற்றும் முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

திரிபோலி நகரிலிருந்து தென்கிழக்கே 380 மைல் தொலைவில் ரஸ் லனுப்பிலுள்ள எண்ணெய் தொழிற்றுறை நிலையமொன்று 15 பேரைக் கொண்ட குழுவால் ஆக்கிரமிக்கப்பட்டு தாக்கப்பட்டதாகவும் அவர்களில் 5 பேர் கொல்லப்பட்டதாகவும் ஏனையவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் கிழக்கு லிபியாவிலுள்ள கடாபிக்கு எதிரான படையினரின் கட்டளைத் தளபதி கேணல் ஹமீட் அல் ஹாஸி தெரிவித்தார். அதன் பின் ரஸ்லனுப் துறைமுகம் மீளவும் ஆயுதக் குழுவொன்றால் தாக்கப்பட்டுள்ளது. இரு தாக்குதல்களிலும் 15 பேர் பலியாகியுள்ளனர்.

@மலும் திரிபோலி நகரிலுள்ள அமெரிக்க தூதரக கட்டடமும் கடாபிக்கு ஆதரவான படையினரால் தாக்கப்பட்டுள்ளது

0 comments:

Post a Comment