Subscribe:

Wednesday, September 14, 2011

900வருடங்கள் பழமையான அல்குர்ஆன் பாகிஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.



பாகிஸ்தானின் ஜேல்யும் நகரத்தில்,900வருடங்கள் பழமைவாயந்த புனிதஅல்குர்ஆன் பிரதியொன்று அந்நாட்டின்முக்கிய தொல்பொருளியலாளர் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இப்புனித அல்குர்ஆன் பிரதியானது 12ஆம்நூற்றாண்டிக்குரியது எனபாகிஸ்தானின் பிரபலதொல்பொருளியலாளர் குலாம் அக்பர்மாலிக் தெரிவித்துள்ளார். ஜெல்யும்நகரின் மலைப்பகுதியில் வாழும் வயதுமுதிர்ந்த ஒருவரிடம் இருந்துஇப்பழமைவாய்ந்தபுனித அல்குர்ஆன் பிரதிபெறப்பட்டதாக, குலாம் அக்பர்மாலிக் தெரிவித்தார்.

900ஆண்டுகள் பழமைவாயந்த இவ்அல்குர்ஆன் பிரதியானது,12ஆம் நூற்றாண்டில் ஸிராஜூதீன்அபூதாஹிர் பின் முஹம்மத் என்பவரால் எழுதப்பட்டதாகும். இப்புனித அல்குர்ஆன்பிரதியானது 1200பக்கங்களைக் கொண்டுள்ளதுடன்,இதன் எடையானது 5கிலோகிராம் எனவும்,குலாம் அக்பர்மாலிக் மேலும் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment