Subscribe:

Monday, September 12, 2011

ரஷ்ய ஜனாதிபதிக்கு சவால்: பிரிட்டன் பிரதமர் கமரூன் மாஸ்கோ பயணம்

பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் ரஷ்யா தலைநகர் மாஸ்கோவிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இந்த நிலையில் பிரிட்டனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே உள்ள சில பிரச்சனைகளுக்கு தீர்வு காண ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெட்வடேவை வலியுறுத்த வேண்டும் என்று பிரிட்டனின் 4 முன்னாள் அயல்துறை அமைச்சர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

ஊழலுக்கு எதிராக வணிகத்தை பாதுகாக்கும் நடவடிக்கையில் ரஷ்ய ஜனாதிபதி கவனம் செலுத்தாதது குறித்து பிரிட்டன் பிரதமர் தனது பயணத்தில் கேள்வி எழுப்ப வேண்டும் என அவர்கள் கூறி உள்ளனர்.
கடந்த 2006ஆம் ஆண்டு அலெக்சாண்டர் லிட்வி னென்கோ கொலை குறித்தும் கேள்வி எழுப்ப வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர்கள் வலியுறுத்தி உள்ளனர். தொழிலாளர் கட்சியை சேர்ந்த மாக்ரெட் பெகட், டேவிட் மில்பாண்ட், ஜாக் ஸ்டிரா மற்றும் கன்சர்வேடிவ் சர் மால்கம் சரிப் கைன்ட் ஆகியோர் பிரிட்டன் பிரதமருக்கு இந்த கேள்வியை எழுப்பி உள்ளனர்.
ரஷ்ய எல்லை பகுதியில் ஊழலை தடுத்து நிறுத்த முடியாத நிலை உள்ளது. அதே போன்று அலெக்சாண்டர் மரணம் போன்ற சட்டம் இல்லாத நிலை பிரிட்டிஷ் கடற்கரையை பாதிப்பதாக உள்ளது.
இதனால் விபரீத விளைவுகள் ஏற்படும் என பிரதமர் கமரூனை முன்னாள் அமைச்சர்கள் எச்சரித்துள்ளனர். கமரூன் ஞாயிற்றுக்கிழமை மாஸ்கோ செல்கிறார். டோனி பிளேர் 6 ஆண்டுகளுக்கு முன்னர் மாஸ்கோ சென்றார். அதன் பின்னர் ரஷ்ய தலைநகர் செல்லும் முதல் பிரிட்டன் பிரதமர் கமரூன் ஆவார்.

0 comments:

Post a Comment