முஸ்லிம் ஆசிரியைகளுக்கு நாடுபூராகவுள்ள பாடசாலைகளில் ஹிஜாப்அணிவதைஅஸர்பைஜான் குடியரசு தடைசெய்துள்ளது. அஸர்பைஜானில் முஸ்லிம் ஆசிரியைகளுக்கானஹிஜாப் தடைச்சட்டமானது,புதிய கல்வியாண்டில் நடைமுறைப்படுத்தப்படுமென, அந்நாட்டின்கல்வி ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். ஆடைகள் விடயத்தில்ஆசிரியைகளிடையே ஒற்றுமையைக் கொண்டுவரும் நோக்கிலேயே இச்சட்டம் நடைமுறைப் படுத்தப் படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.இத்தடைச்சட்டம்பற்றி அறிவிக்கப்பட்டு ஒருசிலநாட்களின் பின்னர்,பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஹிஜாப் தடைச்சட்டத்தை நீக்கக்கோரி, அஸர்பைஜான் ஜனாதிபதி இல்ஹாம் அலிஜேவிடம் கையளிப்பதற்காக ஏறத்தாள ஒருஇலட்சத்தி முப்பதாயிரத்திக்கும்அதிகமான மக்கள் மனுவொன்றில் கையெழுத்திட்டனர்.முஸ்லிம்பெண் மாணவிகள் பாடசாலைகளுக்கு ஹிஜாப்அணிந்துவருவதை 2010ம் ஆண்டு டிசம்பர்மாதம் முதல் தடைசெய்யப்பட்டதாக அஸர்பைஜான் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அஸர்பைஜான் அரசாங்கத்தின் இஸ்லாமியக்கோட்பாடுகளுக்கு முரணான இத்தடைச் சட்டமானது, அந்நாட்;டு முஸ்லிம் மக்களிடையே பெரும்குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசாங்மானது மதஉரிமைகளை மதிக்கவேண்டியதுடன்,நாட்டில் பிரச்சினைகள் காணப்படாது இருக்கவேண்டும் என அஸர்பைஜான்நாட்டுமக்கள் விரும்புகின்றனர். அஸர்பைஜானில்பெருபான்மையினராக முஸ்லிம்கள் வாழ்கின்றனர். நாட்டின் மொத்தசனத்தொகiயில் 99வீதமானவர்கள் முஸ்லிம்கள் ஆவர்.முஸ்லிம்களைப் பெருன்பான்மையினராகக்கொண்டநாட்டில் இவ்வாறான ஓர் தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டதானது,அரசியல் அவதானிகளால் வியப்புக்குரியவிடயமாக நோக்கப்படுகின்றது.





Sri Lanka Rupee Converter
0 comments:
Post a Comment