![]() |
ஐக்கிய அரபு நாட்டில் உள்ள சார்ஜாவில், 2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பாகிஸ்தானைச் சேர்ந்த மிஸ்ரி நசீர்கான் என்பவரை 17 இந்தியர்கள் சேர்ந்து கொலை செய்தனர்.
சட்டத்திற்கு புறம்பான முறையில் மதுபானம் விற்பது தொடர்பாக எழுந்த தகராற்றில் நசீர்கானை, 16 பஞ்சாப் மாநிலத்தவரும், ஹரியானா மாநிலத்தவர் ஒருவர் உட்பட 17 இந்தியர்கள் சேர்ந்து அடித்துக் கொலை செய்தனர்.
இந்த வழக்கில், 17 பேரும் கைது செய்யப்பட்டு, ஷார்ஜா நீதிமன் றத்தில் விசாரணை நடந்தது. விசாரணை முடிவில் குற்ற வாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
தங்களால் கொலை செய்யப்பட்ட நசீர்கான் குடும்பத்திற்கு 4.36 கோடி ரூபா நட்ட ஈடு வழங்குவதாக, குற்றவாளிகள் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு மிஸ்ரி நசீர்கானின் குடும்பத் தினரும் சம்மதம் தெரிவித்தனர்





Sri Lanka Rupee Converter
0 comments:
Post a Comment