Subscribe:

Wednesday, September 7, 2011

இரட்டை கோபுர தாக்குதலின் 10வது நினைவு தினம்: அமெரிக்காவில் பலத்த பாதுகாப்பு



இரட்டை கோபுரத் தாக்குதல் நினைவு தினத்தையொட்டி தீவிரவாத தாக்குதல் நடக்கலாம் என்பதால் அமெரிக்கா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
அத்துடன் வெளிநாடுகளில் வசிக்கும் அமெரிக்கர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 2001ம் ஆண்டு நியூயோர்க் நகரின் இரட்டை கோபுரங்கள் மீது விமானத்தை மோதச் செய்து தாக்குதல் நடத்தினர். அதில் 3000க்கும் மேற்பட்டோர் பலியாயினர்.
இதையடுத்து தீவிரவாதத்தை அடியோடு ஒழிக்க அமெரிக்க தொடர்ந்து முயன்று வருகிறது. அண்மையில் பாகிஸ்தானில் அல்கொய்தா தலைவன் ஒசாமா பின்லேடனை அமெரிக்கப்படை சுட்டுக் கொன்றது. இருப்பினும் தீவிரவாதம் ஓய்ந்தபாடில்லை.

இந்நிலையில் செப்டம்பர் 11ம் திகதி இரட்டை கோபுர தாக்குதலின் 10ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. அப்போது தீவிரவாதிகள் நாச வேலையில் ஈடுபடக்கூடும் என்பதால் நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
சிறிய ரக விமான மூலம் தாக்குதல் அச்சம் எழுந்துள்ளதால் பாதுகாப்பு அதிகாரிகள் விமானங்களை மிகவும் உண்ணிப்பாக கவனிக்கின்றனர். மேலும் வெளிநாடுகளில் வசிக்கும் அமெரிக்கர்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒசாமா கொல்லப்பட்ட பின்பும் தீவிரவாத அச்சுறுத்தல் தொடர்ந்து உள்ளது. தற்போது எந்தவொரு அமைப்பிடம் இருந்தோ, வேறெந்த வழியிலும் குறிப்பிடத்தக்கவகையில் மிரட்டல் இல்லை.
இருப்பினும் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதுடன் பாதுகாப்பு பலப்படுத்துள்ளது என்று அமெரிக்க உள்துறை மற்றும் வெளியுற அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர். 

0 comments:

Post a Comment