Subscribe:

Monday, September 5, 2011

யாழ் சின்னப்பள்ளிவாசல் புனரமைப்பு பணி


யாழ் சின்னப்பள்ளிவாசலை புனரமைப்பதற்கான முயற்சிகள் புனரமைப்பக் குழுவினால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்நிலையில் ஏற்கனவே பண சேகரிப்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் பிரகாரம் எஸ்.ஏ.சி.எம். பாயிஸ் (ஐக்கிய ராஜ்சியம்) 250 ஸ்ரேலிங் பவுண்களையும் (45000 ரூபாய்) அப்துல் வஹாப் ஜமீன் (பிரான்ஸ்) 25000 ரூபாய்களையும் அப்துல் வஹாப் நஸார்  (நிஸார் – பிரான்ஸ்) 20000 ரூபாய்களையும் இலங்கையில் இருக்கும் அஜ்மயின் அனீர் மற்றும் ஜான்ஸின் ஆகியோர் தலா 25000 ரூபாய்களையும் , சுல்தான் ஜமாலிக் 50000 ரூபாய், சுல்தான் ஜினூஸ் 25000 ரூபாய் தமீம் இன்ஸார்  மற்றும் தமீம் இர்ஸாத் ஆகியோர்  கூட்டாக 30000 ரூபாய்களையும் சாஹுல் ஹமீத் தாலிப் 20000 ரூபாய்களையும் ஏ.சி.சனூன் 10000 ரூபாய்களையும் ஜமால்தீன் சம்சீர்  (சுவிஸ்) 50000 ரூபாய்களையும் சதகதுல் ஜாரியாவாக வழங்கியுள்ளனா.

தைபூர்  இப்திகார்  அவர்கள் பெரியதொரு தொகையையும் தருவதாகவும் உறுதியளித்துள்ளனர். பாரூக் அஸ்கர் (ஐக்கிய ராஜ்சியம்)அவர்கள் மலசல கூடமொன்றை அமைக்க உதவிசெய்வதாக கூறியுள்ளார். சின்னப்பள்ளியை அடுத்தே மையவாடி அமைந்துள்ளதால் அப்பள்ளிக்கு உயிரூட்டி கபுராலிகளான எமது மூதாதையர்களுக்காக துஆ கேட்கக்கூடிய மக்களை அங்கு உருவாக்கும் கடமை எமக்குள்ளது. இந்த வகையில் மஹல்லாவாசிகள் மட்டுமன்றி ஏனைய முஸ்லிம்களும் பங்களிப்பு செய்யலாம் என தற்போது குழு தீர்மானித்துள்ளது.
இந்த முயற்சி தனியே பள்ளிவாசலை மட்டும் கட்டும் பணியாக அல்லாமல் அந்தப்பள்ளிவாசலுக்கு மஹல்லாவாசிகளையும் உருவாக்கும் திட்டத்தைக் கொண்டுள்ளது. பள்ளிவாசலுக்கு சொந்தமான ஏழு அறைகள் உடைந்த நிலையிலுள்ளன. இவற்றை மீளமைத்தால் சில தொழுகையாளிகளுக்கு வாடகைக்கு வழங்கலாம். மேலும் மடம் தொடக்கம் பெரியகுளம் வரையிலான பகுதியில் மேலும் இருபது அறைகளை அமைத்தால் அதன் மூலமாக மேலும் இருபது தொழுகையாளிகளை குடியேற்றலாம்.
மேலும் சின்னக்குளத்தின் மேல் வீதியிலிருந்து பத்து அடிகளை பிடித்து தூண்களை அமைத்து ஸ்லப் போட்டு அதன் மேல் இன்னும் 10 அறைகளை அமைக்கும் திட்டமும் உள்ளது. இத்திட்டத்தினூடாக குளத்தடி ஜின்னாவீதி ஆஸாத் வீதி மற்றும் முஸ்;லிம் கல்லூரி வீதி போன்றவற்றை சனப்பிளக்கமுள்ள இடமாக மாற்றி மீளக்குடியேற்றத்தை இன்ஷா அல்லாஹ் ஊக்கப்படுத்தலாம்.
மேலும் வெளியூர்களிலிருந்து பெண்கள் குடும்பங்கள் சகிதம் நீண்ட தூரம் பிரயாணம் செய்து வரும் முஸ்லிம் சுற்றுலாப் பிரயாணிகள் மலசலகூட வசதிகளின்றி அவதிப்படுகின்றனர். இவர்களுக்கான வசதிகளை சின்னப்பள்ளி வளவில் அமைத்துக்கொடுக்கும் திட்டமும் உள்ளது. புதிதாக ஒரு அறையை புதிதாக அமைக்க 75000 முதல் ஒரு இலட்சம் வரை செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வகையில் புலம் பெயர் இலங்கை முஸ்லிம்களின் உதவிகள் எமது திட்டங்களை திறம்பட செய்து முடிக்க உதவும்.
இதன் நிமித்தம் வெளிநாடுகளில் பணத்தை சேகரிக்கும் பொருட்டு எஸ்.ஏ.சி.எம். பாயிஸ் ( 00447865650746 ) அவர்களை ஐக்கிய ராஜ்சியத்துக்கும் மற்றும் முழு ஐரோப்பாவுக்கு பொறுப்பாகவும் ஜமால்தீன் சம்சீர் அவர்களை (0041817103440) சுவிஸ்ஸுக்கு பொருப்பாகவும் நியமித்துள்ளோம். பிரான்ஸில் இது தொடர்பான மேலதிக விபரங்களை அப்துல் வஹாப் ஜமீன் அவர்களிடம் பெற்றுக் கொள்ளலாம்.
தகவல்
எம்.எஸ்.எம். ஜான்ஸின் -செயலாளர்
சின்னப்பள்ளி புனரமைப்புக் குழு
இலங்கை

0 comments:

Post a Comment