Subscribe:

Sunday, September 4, 2011

அமெரிக்காவில் 20வீதமான சிறுவர்கள் வறுமையுடன்வாழ்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.






அமெரிக்காவில் 20வீதமான குழந்தைகள் வறுமையுடன் வாழ்வதாக புதிய அறிக்கையொன்றுதெரிவிக்கின்றது.அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியே இந்நிலமைக்குக்காரணமாகும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. 14.7மில்லியன் சிறுவர்கள் வாழும் அமெரிக்கக் குடும்பங்களின் ஒருவருட வருமானமானது 21,756அமெரிக்க டொலர்களிலும் குறைவாகக்காணப்படுவதாக, இவ்வறிக்கையை வெளியிட்ட அமெரிக்காவின் சிறுவர்தன்னார்வக்குழுவொன்று தெரிவிக்கின்றது. 2000முதல் 2009ம்ஆண்டு காலப்பகுதிவரை 38மாநிலங்களில் வறுமையால்வாடும் அமெரிக்கச்சிறுவர்களில் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக அவ்வறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவின் மிஸிஸிப்பிமாநிலத்திலேயே அதிகசிறுவர்கள் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இங்கு ஏறத்தாள 31வீதமான சிறுவர்கள் வறுமையுடன்வாழ்கின்றனர்.அமெரிக்காவின் நியூஹம்ஸ்பேயாமாநிலம் குறைந்தளவு சிறுவர்கள் வறுமையால் பாதிக்கப்பட்ட மாநிலமாகக் கணிக்கப்பட்டுள்ளது.இங்கு ஏறத்தாள 11வீதமானசிறுவர்கள்வறுமையால்பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் சிறுபான்மைசமூகங்களில் வாழும் சிறுவர்களே அதிகமாக வறுமையினால்பாதிக்கப்பட்டுள்ளனர்.இது ஆபிரிக்கஅமெரிக்க இனத்தவர்களில் 36வீதமாவும்,இந்தியஅமெரிக்க இனத்தவர்களில் மற்றும் அலஸ்காபிரஜைகளில் 35வீதமாகவும், ஹிஸ்பானிக்இனத்தவர்களில் 31வீதமாகவும் காணப்படுகின்றதாக அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment