Subscribe:

Wednesday, September 7, 2011

லிபியாவின்வளங்களை தன்னலத்திற்காகப்பயன்படுத்த பிரிட்டன் திட்டம்.




லிபியாவின் பெற்றோலியவளங்களை தமது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவருவதற்கு பிரிட்டன் திட்டமிட்டுள்ளது.இந்நோக்கிலேயே பிரிட்டன் லிபியாமீது நடவடிக்கை எடுத்துவருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. லிபியாவின் அரசஎதிர்ப்புப்படையினர் திரிப்போலிநகரின் அதிகமான பகுதிகளை கைப்பற்றியுள்ளனர். இதேவேளை உலகின் வல்லரசுநாடுகள் லிபியாவில் தமக்குசார்பான புதியதோர்அரசாங்கத்தை உருவாக்கி, அந்நாட்டின்எண்ணெய்வளங்களை சூறையாடுவதற்கு முயற்சித்து

வருகின்றன.இதனால் லிபியாவின் பொருளாதாரம் வல்லரசுநாடுகளில் தங்கிகாணப்படும்நிலை ஏற்படும். லிபியாவில் புரட்சிநடப்பதற்கு முன்னால்,அங்கு ஒருநாளைக்கு ஏறத்தாள 1.6மில்லியன் பெரல்,எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.லிபியாவனது உலகில் எண்ணெய் உற்பத்திசெய்யும் நாடுகள்வரிசையில் 17ஆம்இடத்தில் உள்ளதுடன், ஆபிரிக்ககண்டத்தில் எண்ணெய் உற்பத்திசெய்யும்நாடுகளில் 3ஆம்இடத்தில் காணப்படுகின்றது.ஆறுமாத உள்நாட்டுப்போருக்குபின்னர் அங்கு எண்ணெய் உற்பத்திசெய்யும் அளவானது ஏறத்தாள ஒருஇலட்சம் பெரல்களினாலேயே குறைந்து காணப்பட்டது.லிபியாவில் இருந்து பாரியளவில்பெற்றோலியவளங்களைத் தாம் பகிர்ந்துகொள்ளத்திட்டமிட்டுள்ளதாக,பிரிட்டனின் விபயாபாரத் திணைக்களப் பேச்சாளர்ஒருவர் தெரிவித்துள்ளார்.வல்லரசுநாடுகள் தமது சொந்தஇலாபத்திற்காவே லிபியாவின் மீது தாக்குதல்களைநடாத்த நேட்டோவிக்கு கட்டளையிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் கேணல்கடாபி ஆட்சிகவிழ்க்கப்பட்ட பின்னரான லிபியா மற்றுமோர் ஈராக்காகவேஇருக்கும் என அரசியல்அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

0 comments:

Post a Comment