Subscribe:

Monday, September 5, 2011

யாழ்ப்பாணம் பெரிய பள்ளியின் இன்றைய தோற்றம்


வடமாகாண முஸ்லிம்கள் புலிப் பயங்கரவாதிகளினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு எதிர்வரும் கருப்பு ஒக்டோபருடன் 21 ஆண்டுகள் பூர்த்தியாகின்றது. இந்த நிலையில் முஸ்லிம்களின் வெளியேற்றத்தை மேற்கொண்ட சக்திகளின் இராணுவ பலம் அழிக்கப்பட்டுள்ள நிலையிலும் முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் மந்தகரமாக உள்ளது.
முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் மன்னார், முல்லைத்தீவு, வவுனியா ஆகிய பிரதேசங்களில் ஓர் அளவு சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெற்று வருகின்றபோதும் யாழ்பாணம், கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களில் மிகவும் மந்தகரமாகவுள்ளது. படங்கள்
இது மிகவும் வருத்தம் தரும் செய்தியாக இருந்த போதும் அங்குள்ள பெரும்பாலான மஸ்ஜிதுகள் , பாடசாலைகள் என்பன மீண்டும் ஓர் அளவு இயங்க ஆரம்பித்துள்ளன என்பது மிகவும் மகிழ்ச்சியான தகவல். இந்த வகையில் கடந்த 2010 ஆம் ஆண்டு யாழ்பாணம் பெரிய பள்ளியின் தற்போதைய தோற்றம் என்று அந்த மஸ்ஜித்தின் பல படங்களை lankamuslim.org வேதனையுடன் பதிவு செய்திருந்தது. அந்த மஸ்ஜித்தின் இன்றைய தோற்றத்தை lankamuslim.org மகிழ்ச்சியுடன்  மீண்டும் பதிவு செய்கின்றது.
இந்த பதிவுகள் மகிழ்ச்சியையும் உச்சாகத்தையும் தருவதாக அமைந்துள்ளது. இன்றைய யாழ்பாணத்தில் பல ஊர்களை சேர்ந்த முஸ்லிம்கள் குடியேறி வருகின்றார்கள் என்பது சிறப்பம்சமாகும். கொழும்பில்   வசிக்கும் யாழ்ப்பாண முஸ்லிம் வர்த்தகர்களின் பொருளாதார உதவியால் மீண்டும் இந்த மஸ்ஜித் புனர் நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பெரிய பள்ளி The Grand Mosque  இன்றைய தோற்றம் படம் 02.09.2011
படங்கள் மீது கிளிக் செய்வதன் மூலம் படங்களை பெரிதாக பார்க்க முடியும்
யாழ்ப்பாணம் பெரிய பள்ளி The Grand Mosque  நேற்றைய தோற்றம் படம் 10.01.2010
படங்கள் மீது கிளிக் செய்வதன் மூலம் படங்களை பெரிதாக பார்க்க முடியும்

0 comments:

Post a Comment