Subscribe:

Saturday, September 10, 2011

கனடாவின் பிரிட்டிஷ் கொலைம்பியாவில் நிலநடுக்கம்


கனடாவில் உள்ள பிரிட்டிஸ் கொலம்பியா வளைகுடாவில் வெள்ளியன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 6.4 பதிவானதாக அமெரிக்க நிலநியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
வான்கூவரிலிருந்து 300 கி.மீட்டர் தூரத்தில் ஏற்பட்டதாக தெரிவித்தனர்.

இந்த நிலநடுக்கத்தால் சேதம் ஒன்றும் இல்லை என்றும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை என்றும் அரசு அதிகாரி ஒருவர் கூறினார்.
நிலநடுக்கம் 20 கிலோ மீட்டர் பரப்பளவில் உணரப்பட்டதாகவும், சரியாக 12.51 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் தெரிகிறது.
இதற்கு முன் இதேபோன்ற ஒரு நிலநடுக்கம் பிரிட்டிஷ் கொலம்பியாவில் சென்ற 2004 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உணரப்பட்டது என கனடா புவியியல் ஆய்வு விஞ்ஞானி ரோஜர்ஸ் கூறினார்

0 comments:

Post a Comment