Subscribe:

Sunday, September 11, 2011

சமுதாய சீரழிவைத் தடுப்பதில் பெண்களின் பங்களிப்பு


பெண்கள் நாட்டின் கண்கள் என்று சொல்லுவார்கள். அது மட்டுமல்ல இன்றைய யுவதிகள் நாளைய தாய்மார் ஆவர். இந்தத் தாய்மார் சிறுமிகளாக உள்ளபோதும் யுவதிகளாக உள்ளபோதும் எவ்வாறு வழிகாட்டப்பட வேண்டும் என்பது பற்றி ஒவ்வொரு பிரதேசத்திலுமுள்ள முஸ்லிம் தலைவர்கள் மற்றும் பள்ளிவாசல் நிர்வாகிகள் சமூகசேவை அமைப்புக்கள் சிந்திக்க வேண்டிய காலமாக இது உள்ளது.  இன்றைய இன்ரர்நெட் யுகத்தில் பெண்பிள்ளைகள் வழிதவறிச் செல்வதற்கான பாதைகள் ஏராளமாக உள்ளன.

சினிமா சின்னத்திரை நாவல்கள் சஞ்சிகைள் பத்திரிகைகள் தெலைக்காட்சி வானொலி என்று எல்லா ஊடகங்களும் ஆண்களும் பெண்களும்  வழிதவறிச் செல்வதை சர்வசாதரமான ஒரு விடயமாக காட்டுகின்றன. மேலும் பெண்களின் வெட்கத்தை போக்கும் செயற்பாடுகளை நிகழ்ச்சிகளாக்கி ஒலிபரப்பு செய்கின்றன.
இன்று இலங்கையில் எல்லா ஊடகங்களிலும் சினிமா சின்னத்திரை நாவல்கள் சஞ்சிகைகள் எல்லாவற்றிலும் செக்ஸை தூண்டக்கூடிய விடயங்களுக்கே முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. இந்த ஊடகங்களை அதிகமாக பார்ப்போர்களில்  முஸ்லிம் யுவதிகளும் இளைஞர்களும் உள்ளார்கள். செக்ஸ் சம்பந்தமான சினிமா சம்பந்தமான கேள்விகளை கேட்பதில் முஸ்லிம் யுவதிகளை விஞ்ச யாரும் கிடையாது என்று கூறுமளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளது . மேலும் காதலைத்தூண்டும் அருவருப்பான சினிமா பாடல்களை விரும்பிக் கேட்போராகவும் இளம் முஸ்லிம் பெண்கள் மாறியுள்ளார்கள். காதல் கட்டுக்கதைகளையும் பாலுணர்ச்சியைத் தூண்டக் கூடிய விடயங்களையும் எழுதித் தள்ளக் கூடிய சஞ்சிகைனளையும் பத்திரிகைகளையும் முஸ்லிம் யுவதிகளுக்கு..  கிடைகின்றது . இவர்களுக்கு இந்த மாதிரியான சஞ்சிகைகளையும் பத்திரிக்கைகளையும் வாங்கிக் கொடுப்போராக சில சமயங்களில் தகப்பனே செயற்படுகின்றார்.
 எம்மைப் படைத்த இறைவன் எமக்கு எது நல்லது கெட்டது என்பதையும் தெளிவாக கூறியுள்ளான். இஸ்லாத்தை பொருத்தவரை இசை சினிமா சின்னத்திரை போன்ற நிகழ்ச்சிகளை பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் அவற்றை ஹராமாக தடைசெய்யப்பட்டவையாக ஆக்கியுள்ளது. இந்நிலையில் ஆன்களாயினும் பெண்களாயினும் அவற்றை தவிர்ந்து நடப்பதே நல்லது. வெறும் பாட்டுத் தானே என்றோ வெறும் நாடகம் தானே என்றோ அவற்றை ரசிக்கத் தொடங்கினால் அதன் மூலமாக எமது உள்ளம் பாதிப்படைகின்றது. வாலிபர்களும் யுவதிகளும் இன்றைய பாடல்களை கேட்கும் போது ஆபாச ரீதியாக தூண்டப்படுகிறார்கள். இந்த தூண்டுதலை அணைக்க அவர்களுக்கு ஒரு துணை தேவைப்படுகிறது. அதனால் அவர்கள் விபச்சாரத்தை புரிய நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். இன்றைய ஊடகங்கள் ஒரு பெண் வீட்டுக்குள் இருந்தாலும் அவளது மனதை கெடுத்து பாவங்கள் செய்யத் தூண்டுமளவுக்கு நிகழ்ச்சிகளை வழங்குகின்றன.
தொலைக்காட்சி பார்த்தல் அதன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளல் வானொலியில் விரும்பிய பாடலை ஒலிபரப்புமாறு கேட்டல் சஞ்சிகைகளில் கேள்வி கேட்டல்  போன்ற விடயங்களை நல்ல விடயங்களாக பெருமைக்குரிய விடயங்களாக முஸ்லிம் யுவதிகளில் ஒரு பகுதியினர் இன்று கருத ஆரம்பித்துள்ளார்கள்.  மறுபுறத்தில் பெற்றோர் இவற்றைப்; கண்டும் காணாதது போல் நடந்து கொள்கிறார்கள். மற்றொரு சாராருக்கு வீட்டில் தமது பெண் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்பது கூடத் தெரிவதில்லை. ஆனால் இந்நிகழ்ச்சிகளில் தொலைபேசி மூலமோ வேறு வழிகளிலோ தொடர்பு கொள்பவர்கள் காலப்போக்கில் அந்நிய ஆணுடன் விதிமுறைகளை மீறி சகஜமாகப் பழகக்கூடிய தன்மையை பெற்றுக்கொள்கின்றனர். மறுபுறம் ஆண்களில் அதிகமானவர்கள் நல்ல நோக்கத்துடன் பழகுவதில்லை. நல்ல நோக்கத்துடன் பழக செய்த்தான் விடுவதுமில்லை. அவர்களது மனதை கெடுத்து  பாவத்தை செய்யுமாறு தூண்டுகின்றான்.
மேற்சொன்ன ஊடகங்களின் தாக்கங்களினால்    இன்றைய இளம் சமுதாயம் சீரழிந்து செல்கின்றது. அல் குர்ஆன் ஓத வேண்டிய நாவுகள் ஊர் பலாய்களை பேசுகின்றது. நல்ல பேச்சுக்களை கேட்க வேண்டிய காதுகள் முனாபிக் தனத்தை உண்டாக்கக் கூடிய இசைகளை கேட்கிறது. கெட்டவற்றை கண்கள் பார்க்கின்றன. இவற்றினூடாக நல்ல பழக்கவழக்கங்கள் அருகி பாவச்செயல்கள் தலை தூக்குகின்றன. இதற்கு அந்தக் குடும்பத்தினை பொறுப்பேற்று நடத்துவோர் பொறுப்பாளியாகின்றனர். பெண்ணின் தகப்பன் கணவன் சகோதரன் மற்றும் மகன் ஆகியோர் வழிகேடான பாதைகளில் செல்லும் பெண்களைத் திருத்த கடமைப்பட்டுள்ளனர். பெண்கள் ஊடகங்களை தவரான முறையில் பிரயோகிக்கும் போது அதைக் கண்டும் காணமலும் இருக்கக் கூடிய நான்கு வகையான ஆண்கள் நரகம் செல்லுவார்கள் என்பதாக இஸ்லாம் எம்மை எச்சரிக்கின்றது.
ஊடகங்களால் வழிகெடுவோர் ஒரு புறமிருக்க இன்று அதிகமான பெண் பிள்ளைகள் உயர்கல்வி தொழில்கல்வி வேலை என்று கூறிக் கொண்டு வீட்டைவிட்டு தூரமாகின்றனர். இஸ்லாம் பெண்களை உயர்கல்வி கற்க வேண்டாமென்றோ அல்லது தொழில் செய்ய வேண்டாமென்றோ கூறவில்லை. மாற்றமாக இஸ்லாம் அனுமதித்த பிரகாரம் அவற்றைச் செய்யுமாறு கூறுகின்றது.
இன்று உயர்கல்வி பல்கலைக்கழகக் கல்வி தனியார்துறைக் கல்விகளை கற்ற எத்தைனயொ யுவதிகள் திருமணத்தின் பின் தமது கல்வியை ஒருபுறம் தள்ளி வைத்துவிட்டு வீட்டுப் பெண்களாக உள்ளனர். தமது கணவனுக்கு நல்ல மனைவியாக பிள்ளைகளை பேணிப் பாதுகாத்து வளர்க்கக்கூடியவர்களாக வீட்டுப்பணிகளை செய்யக்கூடியவாகளாக அவர்கள் வாழ்கின்றனர். அவர்கள் கற்ற கல்விகள் இங்கு வீண் போவதாக கருதப்படுவதில்லை.( அது தனது குடும்பத்திற்கு உதவினாலும் சமூகத்துக்கு எந்த பயனும் இன்றி போய்விடுகின்றது )  அவர்கள் திருமணத்தின் பின்பு தமது வாழ்க்கை எப்படியிருக்கும் என்பதை ஏற்கனவே திட்டமிட்டிருந்திருக்க வேண்டும்.
அது ஒருபுறமிருக்க ஒரு சாரார் தமது குடும்ப வறுமையை போக்க தொழில் செய்கின்றனர். இன்னொரு சாரார் தமது நேரத்தை செலவு செய்வதற்காக தொழில் செய்கின்றனர். மற்றொரு சாரார் தமது திறமை மூலமாக  உயர் கல்விகளை கற்று அதற்கேற்ற தொழில்களையும் பெற்றுக் கொள்கின்றனர். இவ்வாறாக பல்வேறு தொழில்களில் பெண்கள் ஈடுபடும் அதேவேளையில் இஸ்லாம் பெண்களுக்கு பொருத்தமான தொழிலாக வீட்டுக் கைத்தொழிலையும்  காட்டித்தருகிறது. ஹதீஜா நாயகியவர்கள் பெரும் வர்த்தகராக இருந்தார்கள். ஆனால் நம்பிக்கையான ஒருவரை வைத்து வீட்டிலிருந்தவாறு தமது தொழிலை முன்னெடுத்தார்கள். அதேவேளை பாத்திமா நாயகியவர்கள் சில வேளைகளில் வீட்டில் வைத்து பஞ்சை திறித்துக் கொடுக்கும் வேலையைச் செய்தார்கள். பெண்கள் வீட்டிலிருந்து செய்யக்கூடிய தொழில்களையும் இஸ்லாம் உற்சாகப்படுத்துகின்றது. எனவே பெண்கள் வீட்டுக் கைத்தொழில் சம்பந்தமான கல்வியை அல்லது தொழில் அனுபவத்தை  பெற்றுக்கொள்வது சிறந்தது. குடும்பநிலமை காரணமாக தொழில் செய்வோர் அதனை வீட்டிருந்தவாறு செய்யக்கூடிய தொழிலாக அமைத்துக் கொள்வது நல்லது.
தையல் தொழில் காகித உரை  மற்றும் பேக்குகளை ஒட்டுதல் பொதி பண்ணுதல் போன்று பல்வேறு வகை தொழில்களை வீட்டிலிருந்து செய்து கொடுக்கலாம். இதனால் பெண்களுக்கு உரிய வேளைகளில் தொழுவது அல் குர்ஆன் ஓதுவது சமைப்பது மற்றும் பிள்ளைகளுக்கு படித்துக் கொடுப்பது போன்ற தனிப்பட்ட தேவைகளுக்கும் நேரத்தை ஒதுக்கக் கூடியதாகவிருக்கும். அதை விடுத்து பெண்கள் வெளியே தொழில்களுக்காக செல்லும் போது பல்வேறுபட்ட ஆண்களுடன் பழக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. ( இதனால் சிலர் வழிதவரவும் காரணமாக அமைகின்றது )  இது பாவத்தில் கொண்டு சென்று சேர்த்துவிடும் என்று இஸ்லாம் நம்மை எச்சரிக்கின்றது. விதவைப் பெண்கள் தொழில் செய்ய முடியாத நோயாளி கணவனைக் கொண்ட பெண்கள் ஆகியோரையும்  வருமானம் பெறக்கூடிய ஒரு தொழிலை தேவையேற்படின் செய்ய இஸ்லாம் அனுமதிக்கின்றது. அவ்வாறு செய்பவர்களும்  இஸ்லாமிய வரம்புகளுக்குள் நின்று கொண்டே தொழிலை செய்யவேண்டும்.  (என்று இஸ்லாம் ஏவுகின்றது )

0 comments:

Post a Comment